search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள் அட்டகாசம்"

    • யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இதனிடையே உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் 58 யானைகள் முகாமிட்டுள்ளன. டி.கொத்தப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி, பென்னிக்கல் ஆகிய பகுதிகளில் 6 குழுக்களாக இந்த யானைகள் பிரிந்து சுற்றித்திரிகின்றன.

    இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

    இதைபார்த்து கிராமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    பின்னர் அந்த யானை சானமாவு காட்டிற்குள் சென்றது. இதையடுத்து இன்றுகாலை பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி பகுதிகளில் 2 காட்டு யானைகள் வந்துள்ளது.

    அந்த யானைகள் விவசாய விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.
    • இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி, தளி ,பாலதோட்ட பள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் பன்னார் கட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.

    இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேர் வீதி,கும்மளத்தூர், கல்பாலம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை புகுந்த 35 யானைகள் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்துள்ளது. இதில் மாரப்பா என்பவர் தோட்டத்தில் ரோஜா செடிகளை வளர்த்து விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அச்செடிகளை காலால் மிதித்து நாசம் செய்துள்ளது இதனால் இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகாமிட்டுள்ள 35 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு அப்பகுதியிலேயே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடையில் பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது.
    • யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லமுடி- பூஞ்சோலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் அங்கு ஒரு டீக்கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ராஜா வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியில் வந்த 7 காட்டு யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    வெகுநேரமாக அங்கேயே சுற்றிதிரிந்த யானை கூட்டம், அங்குள்ள ராஜாவின் டீக்கடை அருகே சென்று கடையை உடைத்து உள்ளே புகுந்தது.பின்னர் அங்குள்ள பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டன.இன்று காலை ராஜா கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.

    அப்போது யானை கடையை உடைத்து பொருட்களை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த கடையை பார்வையிட்டனர்.

    மேலும் சம்பவம் குறித்து அங்கிருந்த மக்களிடமு ம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மக்கள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×