search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    • காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
    • பங்கேற்கும் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு, கட்டிட அனுமதி,சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் .

    மேலும், சுயசான்று கட்டிட அனுமதி பெறு வதற்கான செயல்முறைகள், தமிழ்நாடு எளிமைப் படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படு வதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
    • அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-புக்குளிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    மேலும் இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மற்றும் திருப்பூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), மங்கலம் பகுதி கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.அதேபோல சுமார் 40லட்சம் மதிப்பிலான குப்பைகள் எரிக்கும் எந்திரத்தை தமிழக அரசு மங்கலம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் , திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இருந்து மங்கலம் ஊராட்சி எல்லை வரை உள்ள நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மங்கலம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியதை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் போதும் பொன்னு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசுல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் வரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த சார் ஆட்சியர் விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    • அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
    • ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம்

    கன்னியாகுமரி :

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ந்தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு உள்ளாட்சி தினத்தையொட்டி லீபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஆரோக்கியபுரத்தில் நடந்தது. லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், சுயம்புகனி, லட்சுமிபாய், ஜெகன், மரிய ஜெராபின், ஜெனிபுரூன்ஸ், டெல்சி, சுமதி, ஊராட்சி செயலாளர் ஜெனட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுற்றுலாத்துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதேபோல லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் லீபுரம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தை சிறப்பாக கட்டுவதற்கு உறுதுணை புரிந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரனுக்கு லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    • 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    கன்னியாகுமரி, நவ.2-

    மகாராஜபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் இந்த பஞ்சாயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.

    கூட்டத்தில் துணை தலைவர் பழனிகுமார், மகாராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சுயம்புலிங்கம், அனீஸ்வரி, சுயம்பு, ராஜம், சுகாதார செவிலியர் ஹெப்சிபாய், மக்களை தேடி மருத்துவம் செவிலியர் ரூபி, சமூக ஆர்வலர் சொர்ணவதி உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களான சிவகாமி, கிருஷ்ணம்மாள், பகவதியம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் மகாராஜபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்

    • தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கிராமசபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), இந்திய விடுதலை நாள், (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    உடுமலை:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறை யாக மாற்றியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, துணை சேர்மன் துரை கற்பகராஜ், கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல்கனி, கிளை செயலாளர்கள் சின்னதம்பி, சீதாராமன், வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    10 சக்கர கனரக லாரிகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி தீர்மானம்

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுமக்கள் சார்பில் குமரி மாவட்ட சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்வதால் சாலைகள் பழுதடைவதாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது. மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளதால், குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் 10 - சக்கரங்களுக்கு மேலான கனிம வள லாரிகளை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.

    கிராம சபை கூட்டத்தில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், ஊராட்சி ஒன்றிய கவுன்சில் விஜயராணி, மற்றும் சுகாதார துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மின்சார வாரியம், ரேஷன் கடை ஊழியர்கள், அரசு செவிலியர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் :

    கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டப் பணிக்கன் தேரி விளையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தங்க மலர் சிவபெருமான் தலை மையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதி க்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் உதவி மருத்துவர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், கால் நடை மருத்துவர் ஆசீர் எட்வின், ஊராட்சி துணை தலைவர் தமிழரசி, வார்டு உறுப்பினர்கள் ஞான வடிவு, அரிஹர சுதன், ஞானராணி, ஆல்வின் ராஜபால், கீதா, ராஜ்குமார், நாகம்மாள், மணிகண்டன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் காளி யப்பன் நன்றி கூறினார்.

    • பொன்னாகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    காந்தி ஜெயந்தியை முன் னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிவக ங்கை சட்டமன்ற உறுப்பி னர் பி.ஆர்.செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் அவர் பேசும்போது "பெற் றோர்கள் தங்கள் பிள்ளை களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். தீய வழியில் சென்று விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பெற் றோர்களுக்கு உண்டு என் றும் தற்போது பரவி வரும் நோய்களில் இருந்து கிராம மக்கள் கவனமாக பாது காத்துக் கொள்ள வேண்டும். சுய வைத்தியம் செய்து கொண்டு அலட்சியமாக இருந்து விடாமல் உரிய மருத்துவர்களை அணுகி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறி னார்.

    இதில் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, பொன்னா குளம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகை சாமி, சித்தலூர் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
    • ‘எல்லாருக்கும் எல்லாம்”கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்"கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய உரையினை மக்களுடன் இணைந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    ×