search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    • டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்றத்தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் ,இடுவாய் ஊராட்சி கிராமசபை கூட்டம் பாரதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.பரமசிவம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் "இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்"என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ,மற்றும் இடுவாய் பகுதி பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களும் "இடுவாய் பகுதியில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை எனவும்,அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்றத்தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களிடம் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் கூறுகையில், மின்கல வாகனம் மூலம் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடுவீடாக சென்று முறையாக குப்பைகள் வாங்கப்படுகிறது எனவும், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளும் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது.

    மேலும் மக்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதரப்படுகிறது என இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தெரிவித்தார்.

    • கிராமசபை கூட்டத்தில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பல்லடம் ூ

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.இதில் பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம்,அரசு அதிகாரிகள்,வார்டு உறுப்பினர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிராமசபை கூட்டத்தில்,ஊராட்சி வளர்ச்சி பணிகள், குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதேபோல பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள்,வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது.கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும்,பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும்,புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையம் ஊராட்சியில், நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அதிகாரிகள், சமரசத்தை அடுத்து சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதேபோல ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.  

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகையை ரூ.1000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சியின் 1.4.2022 முதல் 31.7.2022 முடியவுள்ள காலாண்டின் வரவு செலவு விபரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம சபையில் வரவு செலவுக் கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்டது.

    தமிழக அரசால் 15.8.2022 முதல் 2.10.2022 வரை தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு எழில் மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்து செயல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2 திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010-க்கு பின்னர் புதிய குடிசைகள் அமைத்துள்ளோர் விவரம் குக்கிராமம் வாரியாக கணக்கெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடையும் வகையும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். மேலும், ஊத்துக்குளி வட்டாரம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். திருப்பூர் வட்டாரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மா வட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்-திட்ட இயக்குநர் கலந்து கொண்டார். 

    • திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    • நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    திருப்பூர் :

    சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி. நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டி.எம்.சி. நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. பிஏபி. திட்டத்தில் ஏற்கனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி. தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பங்கேற்றாா்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ஆத்தூர் வட்டார பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் காளீஸ்வரி, ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள 16 தீர்மானங்கள் மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஆத்தூர் வட்டாரம், பாளையங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வம் லட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி மலர்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் கலந்துகொண்டார். ஊராட்சி செயலர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    போடிகாமன்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடி தண்ணீர், சுகாதாரம் உட்பட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்திற்கு தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், துணைத் தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் சேசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ஜம்ரூதீன் பேகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சையது அபுதாஹிர், ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) நடராஜ், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீரக்கல் ஊராட்சியில் நடைபெற்ற, கிராமசபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின் ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜான் கென்னடி, ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பித்தளைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் மயில்சாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், துணைத்தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி செயலர் கண்ணையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், துணைத் தலைவர் கவிதா, ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள 16 தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது.
    • மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்.

    தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

    இரு சமூகக்கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்பு கொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது.

    மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15-ந் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மது விலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராம சபைக் கூட்டங்களில் பா.ம.க.வினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறும்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் ஜல் ஜீவன் இயக்கத்தின் முலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வீடு தோறும் குடிநீர் என்ற நிலையை ஏற்படுத்திய ஊராட்சியாக 9 ஊராட்சிகள் அறிவிக்கப்படு கிறது.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரவிபுதூர் ஊராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பறக்கை ஊராட்சி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிகள், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருவிக்கரை, கண்ணனூர் மற்றும் ஏற்றக்கோடு ஊராட்சி, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஆகிய 9 ஊராட்சிகளிலும் வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஊரக வளர்ச்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிக்கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நீதிராஜ், உறுப்பினர்கள் லெட்சுமி, வனிதா, வீரதுரை, பரமசிவம், கவிதா, ஊராட்சி செயலாளர் அப்புராஜா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஊரக வளர்ச்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிக்கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நீதிராஜ், உறுப்பினர்கள் லெட்சுமி, வனிதா, வீரதுரை, பரமசிவம், கவிதா, ஊராட்சி செயலாளர் அப்புராஜா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×