search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது
    • காருடன் ஒருவர் கைது

    வெம்பாக்கம்:

    தூசி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் தடை செய்யப்பட்ட போதைபொருட்களை 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து

    ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜே.ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் பகுதியில், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கார்களை போலீசார் நிறுத்த முயன்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களில் சோதனை செய்தனர். அதில் தலா 2 டன் என மொத்தம் 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களுடன் கார்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், பட்டோலி பகுதியை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருசா(22) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
    • முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம் வர வேற்றார். கூட்டத்தில் பொருளாளரும், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞ ருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் தொடக்க உரைரையாற்றினார். சட்ட ஆலோசகரும், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான சேக் இப்ராகிம் சட்ட சம்பந்தமாக பேசினார்.

    கூட்டத்தில் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் செய்யது காசீம், மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணைத்தலைவர் மாணிக்கம் இரங்கல் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதை போலீசார் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    போதை பொருட்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மீள சமூக, சமுதாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட கீழக்கரை மீன் மார்க்கெட், பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் இந்த கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது கீழக்கரை தாலுகாவாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கீழ்க்கரை நகராட்சி பகுதி யில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் நகரில் இருந்து தொலைதூரம் அமைந்து இருப்பதால் அதை கீழக்கரை தாலுகா வளா கத்தில் கட்ட அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு தொலை தூர பஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முஹம்மது பாதுஷா, ஹுசைன் அல்லா பக்ஸ், சீனி பாபா பக்ருதீன், ஹசன் பாய்ஸ், சீனி முஹம்மது சேட், பவுசுல் அமீன், அபு பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.

    • திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கெடிலம் கூட்ரோட்டில் நடைபெறற இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், பசவராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

    • போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் தீவிரமாக கண்காணித்த போது நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்னை வந்த நைஜீரிய நாட்டு வாலிபர் ஆரோன் பெல் (30), என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு உரிய வேலை இல்லாததால் மனைவியின் சம்பளத்தில் பெங்களூருவில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

    மேலும் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பெங்களூருவில் இருந்து கொக்கைனை (போதை பொருள்) மொத்தமாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே தங்கி இருக்கும் சாமுவேல் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை சாமுவேல் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர் சாமுவேலையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    ஹூஸ்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா (வயது 34) சிறந்த ராக் இசை பாடகியான இவர் சமூகவலை தளங்களிலும் பிரபலமாக உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

    இதேபோல அமெரிக்காவில் மாடல் அழகியாக இருந்து வருபவர் மெலிசா டுபோர் (30) இவர் டிசைனர் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று டொலொ ரஸ் அன்டியோலாவும், மெலிசா டுபோரும் விலை உயர்ந்த காரில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஹூஸ்டன் நகரில் இருந்து அலபாமா நகருக்கு சென்று கொண்டு இருந்தனர். 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின் போது காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 73 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

    தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும். உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்திவைக்க சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து ேஜாதிராமலிங்கம் மற்றும் அவரது உறவினர் சுந்தரமூர்த்தி உடன் மோட்டார் சைக்கிளில் பொருட்களுடன் கருங்குழியில் உள்ள தனது கடைக்கு வந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதிராமலிங்கம் மற்றும் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.

    • திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலை அனிச்சம் பாளையம் பாலிமர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால சிங்கம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில் விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), தனியார் மண்ட பம் எதிரே உள்ள மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 382 பாக்கெட் போதை மற்றும் குட்கா பொரு ட்களை கைப்பற்றிய விழு ப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.

    • பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×