search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக சேவகர்"

    • ரஜினியுடன் சமூக சேவகர் மணிமாறன் சந்திப்பு
    • ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் கடந்த 21 ஆண்டுகளில் 2ஆயிரத்து 46 உடல்களை நல்லடக்கம் செய்து சமூக சேவையில் முத்திரை பதித்துள்ளார்.

    சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம் பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாண்டுரங்கன் -ராஜேஸ்வரி தம்பதியின் 3-வது மகனாக பிறந்துள்ளார்.

    இவருக்கு லோகநாதன் என்ற அண்ணனும், கலைவாணி என்ற அக்காவும் உள்ளனர்.

    மணிமாறன் 9-ம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் படிப்பில் நாட்டம் இல்லாததால் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரிடம் சமூக சேவையில் ஈடுபட்டு வருவது பற்றி கேட்டபோது பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மணிமாறன் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதை பாராட்டி அவருக்கு பயன்படும் வகையில் ரூ.8லட்சம் மதிப்பிலான ஆம்புலன்சை வழங்கினார்.

    இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது:-

    நான் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி அன்று முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    காசியில் எனக்கு கிடைத்த குரு மற்றும் அங்கு ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை, அகோரி பாபா எனக்கு சொன்ன உபதேசங்கள் ஆகியவை குறித்து தெரிவித்தேன்.

    மேலும் எனக்கு குருநாதர் "சிவகர்ம யோகி "என்ற பெயரை சூட்டி 16 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ சொன்னது குறித்து தெரிவித்தேன். தற்போது அவர் சொன்ன 16 ஆண்டுகள் முடிந்து விட்டது.தற்போது 1 ஆண்டு மட்டும் என் விருப்ப படி முடிவெடுத்து கொள்ளலாம்.

    திருமணத்தில் ஆர்வம் இருந்தால் திருமணமும் செய்து கொள்ளலாம்.ஆனால் நீ ஆயுள் முழுவதும் நல்லடக்கம் செய்யும் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும் குருநாதர் கட்டளை என்பதை கூறினேன்.

    உடனே இது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு. இது கடவுள் தந்த பரிசு.

    நீங்கள் என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்று ரஜினி காந்த் தெரிவித்தார்.

    அதன் பிறகு கடந்த ஜூன் 22-ந்தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் 2-வது முறையாக ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    அப்போது ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நான் அவரது ஆசிர்வாதம் வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு உங்களுக்கு எனது முழு ஆசீர்வாதம் என்றும் உண்டு.

    "இந்த ஆம்புலன்சை நான் தந்தேன் என்பதை மறந்து விடுங்கள்.இது அண்ணாமலையார் தந்தது என்று நினைத்து கொள்ளுங்கள்" என கூறி ஆசி வழங்கினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜபாளையத்தில் சமூக சேவகருக்கு விருது வழங்கப்பட்டது.
    • விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பிரபல மருத்துவர் சாந்திலால் மறைந்து 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது. டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார்.

    எழுத்தாளர் கவிபாலா வரவேற்றார். டாக்டர் சாந்திலால் எழுதிய ''வானவில் கனவுகளோடு நாமும்'' என்ற நூலை அவரது மகள் சுப்ரியா சாந்திலால் மற்றும் மருமகன் தினேஷ் பாபு வெளியிட முதல் பிரதியை டாக்டர் கணேசன் பெற்றுக்கொண்டார். டாக்டர்கள் அறம், ராதா, கவிஞர் ஆனந்தி ஆகியோரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது. மருத்துவர் ராஜாராம், கவிஞர் நித்தியா, மனிதி அமைப்பாளர் செல்வி, கவிஞர் ரமணி, எழுத்தாளர் விஜய ராணி ஆகியோர் பேசினர்.

    பகிர்வு அறக்கட்டளை சரவணன் நன்றி கூறினார். பொருளாளர் பொன் லட்சுமி ஒருங்கிணைத்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய மருத்துவர் சங்கம், சுந்தரி சாந்திலால் நூலகம் மற்றும் பகிர்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.

    ×