search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் அருவி"

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி கரையோரம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 6-வது நாளாக தடை விதித்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 6-வது நாளாக தடை விதித்தது.

    ஒகேனக்கலில் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதித்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதித்தது.

    ஒகேனக்கலில் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
    • பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், காவிரி கரையோரங்களிலும் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்து காணப்பட்டது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 39 நாட்கள் தடைவிதித்து இருந்தது.

    இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இன்று முதல் பரிசல் இயக்க மட்டும் அனுமதி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் மெயின் அருவி தடுப்பு கம்பிகள் சேதம் ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    • இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரளா மாநில இடையேயான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 34-வது நாளாக தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 31-வது நாளாக தடை விதித்துள்ளது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி தொடர்ந்து 4-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 31-வது நாளாக தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

    • கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மற்றும் கேரளா மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநில கபினி அணைக்கு 24 ஆயிரத்து 932 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 97 ஆயிரத்து 969 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

    இந்த இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 969 கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 30-வது நாளாக தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

    • ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் வந்தது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை விதித்துள்ளது.

    பென்னாகரம்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 629 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 9 ஆயிரத்து 250 கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இரு அணைகளின் இருந்து 44 ஆயிரத்து 879 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு லுவுக்கு கரைபுரண்டு வந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி தண்ணீர் வந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை விதித்துள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

    மேலும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் ஒகேனக்கலில் முகாமிட்டுள்ளனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று மாலை திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில் காவிரி ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்த ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் என்பவர் மெயின் அருவி நடைபாதை அருகே மாட்டி கொண்டார். இதனால் அங்கிருந்து வரமுடியாமல் தவித்தார். பின்னர் நடைபாதை வழியாக வெள்ளத்தில் நடந்து வந்தபோது அவர் திடீரென அடித்து செல்லப்பட்டார்.

    தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீனவரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டாவது முறையாக 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 24-வது நாளாக தடை விதித்துள்ளது.
    • போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடக, கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 19 ஆயிரத்து 590 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 896 கனஅடிநீரும் திறக்கப்பட்டது.

    இந்த இரு அணைகளில் இருந்து மொத்தம் 26 ஆயிரத்து 486 கனஅடிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கலில் உள்ள அனைத்து அருவிகளும் மூழ்கியுள்ளது. சில பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 24-வது நாளாக தடை விதித்துள்ளது.

    போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று ஒகேனக்கலுக்கு 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 23-வது நாளாக தடை விதித்துள்ளது.

    போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    ×