search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎம்டபிள்யூ"

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் தான் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • இது அபாச்சி RR 310 மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் இந்திய வினியோகத்தை துவங்கி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு பெயிண்ட் ஆப்ஷனில் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக் ஷேட் கொண்டிருக்கிறது. பிரீமியம் ஸ்டைல் ஸ்போர்ட் மாடலில் ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் நிறம் உள்ளது.


    இரு நிறங்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் ஒற்றை வித்தியாசம் அதன் நிறங்கள் மட்டுமே. மற்றப்படி ஹார்டுவேர், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்கள் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங், 5 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு பை வயர் திராட்டில், நான்கு வித ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் வீல் லிப்ட் ஆப் ப்ரோடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் உள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் டிராக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்களில் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ரெயின் மற்றும் அர்பன் மோட்களில் செயல்திறன் 25.4 ஹெத்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் என குறைந்து விடும்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X7 காரின் ஸ்பெஷல் எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 40i ஜாரெ M எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ X7 ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பிஸ்போக் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பெரிய கிட்னி கிரில், கிளாஸ் பிளாக் பினிஷ், முன்புறம் மற்றும் பின்புறம் M சின்னம் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் மினரல் வைட் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய X7 மாடலில் 21 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் உள்ளன. இத்துடன் M அக்சஸரீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.


    பிஎம்டபிள்யூ X7 40i 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் எபிஷியண்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் என மூன்று விதமான டிரைவ் மோட்களை இந்த கார் வழங்குகிறது. இவை கார் என்ஜினின் சேசிஸ், ஸ்டீரிங் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவைகளின் செயல்திறனை ஆல்டர் செய்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புது பைக் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்த மாதத்திலேயே துவங்குகிறது.

    பிம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் 2022 R 1250 RT டூரிங் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 23 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாடலின் வினியோகம் இந்த மாதத்திலேயே செய்யப்படுகிறது.

    புதிய R 1250 RT மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், டூரிங்கிற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி லக்கேஜ் ராக், பேனியர் கேஸ்கள், ஹீடெட் க்ரிப், சீட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் கிளட்ச், பிரேக் மற்றும் கியர் லீவர் உள்ளிட்டவைகளை ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளது. எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், ஸ்டீரிங் ஸ்டேபிலைசர், குரூயிஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிஎம்டபிள்யூ R 1250 RT மாடலில் 1254சிசி, பாக்சர் ட்வின், லிக்விட் கூல்டு DOHC என்ஜின், பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 132.2 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் அலுமினியம் கேஸ்ட் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது பிஎம்டபிள்யூ M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் M4 காம்படிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 1 கோடியே 53 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக M340i எக்ஸ்டிரைவ், 6 சீரிஸ் GT மற்றும் 5 சீரிஸ் கார்களின் 50 ஜாரெ எம் எடிஷன் கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது M4 காம்படிஷன் 50 ஜாரெ எம் எடிஷன் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் மகவ் புளூ மற்றும் இமோலா ரெட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலாய் வீல்கள் மேட் கோல்டு பிரான்ஸ் நிறம் கொண்டிருக்கிறது.


    காரின் உள்புறம் ஹை-கிரேடு மெரினோ லெதர், ஆல் பிளாக் டோன், சீட் மற்றும் டோர் சில்களில் 50 எம் ஜாரெ பேட்ஜகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் செண்டர் கன்சோலில் ஸ்பெஷல் மெட்டல் பிளேக் மற்றும் 50 M ஜாரெ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    M4 காம்படிஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 2993 சிசி, சிங்கில் சிலிண்டர், ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 503 ஹெச்பி பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். 

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் அபாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கிய புது மோட்டார்சைக்கிளை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
    • இந்த மாடல் கேடிஎம் RC 390 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது புதிய G 310 RR மாடல் இந்திய சந்தை முன்பதிவில் ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இது பற்றிய அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ G 310 RR மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ G 310 RR மாடல் - ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. தோற்றத்தில் மட்டுமே இரு மாடல்களும் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. ஸ்டாண்டர்டு வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. அதிக விலையில் கிடைக்கும் ஸ்டைல் ஸ்போர்ட் வேரியண்ட் ரேசிங் புளூ மெட்டாலிக், ரேசிங் ரெட் நிறத்தில் கிடைக்கிறது.


    விலை விவரங்கள்:

    பிஎம்டபிள்யூ G 310 RR ஸ்டாண்டர்டு ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம்

    பிஎம்டபிள்யூ G 310 RR ஸ்டைல் ஸ்போர்ட் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன

    பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் லெவல், என்ஜின் டெம்பரேச்சர் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×