search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர் சாவு"

    • சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.
    • விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு அடுத்துள்ள காமாட்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது55). சாலை பணியாளராக பணியாற்றி வந்த இவர் இருசக்கர வாகனத்தில் தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது45). இவர் ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று தளிசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பெரியண்ணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கம்பி அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52). இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று சக்கரவர்த்தி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பில் விழுந்து கிடந்தது. அதனை சக்கரவர்த்தி மிதித்துள்ளார்.

    இதில் அவரை தூக்கி வீசியது இதில் படுகாயம் ஏற்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை பிரேத பரி சோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×