search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "26 கிலோ அரிசி மூட்டை"

    • திருவள்ளூர் பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.
    • ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரிசி விலை குறைந்துள்ளது. நெல்லின் வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றின் காரணமாக அரிசி விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    26 கிலோ அரிசி மூட்டை தற்போது சந்தையில் ரூ.930 முதல் 1700 வரையில் கிடைக்கிறது. அரிசியின் தரத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி மூட்டைகள் அனைத்துமே 20 ரூபாய் குறைந்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவரான துளசிங்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் மக்கள் பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்குவதில் தான் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர். நெல்வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய நெல் அறுவடை ஆகியவற்றால் 26 கிலோ அரிசி மூட்டை ரூ.20 வரையில் குறைந்துள்ளது.

    இட்லி அரிசியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.1010-க்கு விற்பனையான 26 கிலோ இட்லி அரிசியின் விலை தற்போது 980-ஆக வும், ரூ.1030-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசியின் விலை 990-ஆகவும் குறைந்துள்ளது.

    செங்குன்றம் பகுதிக்கு தினமும் லாரிகளில் வருகை தரும் நெல்லின் அளவு அதிகரிப்பு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கடம்பத்தூர், பகுதிகளில் புதிய நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாகும்.

    அதே நேரத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் தரமாக உள்ளது. இதுவும் அரிசி விலை குறைவுக்கு ஒரு காரணமாகும். 1 கிலோவில் இருந்து 20 கிலோ வரையில் மட்டுமே அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

    அதனால் வியாபாரிகள் அனைவருமே 26 கிலோ அரிசி பையையே விற்பனை செய்கிறார்கள். 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி மூட்டைகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்பதால் 25 கிலோ மூட்டையை 26 கிலோவாக வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க திட்டம்
    • கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

    வேலூர்:

    மத்திய அரசின் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க வேலூரில் உள்ள கடைகளில் 26 கிலோ அரிசி மூட்டை கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    மத்திய அரசு அத்தியாவசிய உணவுப்பொருட்களுக் கான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தது. இதனை கண்டித்தும், வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 16-ந் தேதி மொத்த அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை கடை வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மத்திய அரசு 25 கிலோவிற்கு மேல் பண்டல்கள் (பேக்கிங்) செய்யப்பட்ட உணவுப்பொருட்க ளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி கிடையாது. 25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பண்டல்கள் செய்யப்பட்ட அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரிசெலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் நகரில் உள்ள அரிசி கடைகளில் 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 5 சதவீத - ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ அரிசி மூட்டையை அரிசி ஆலைகள் தயார் செய்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. எனவே பொதுமக்களின் நலன் கருதி 25 கிலோ மூட்டைக்கு பதி லாக 26 கிலோ மூட்டைக ளாக அரிசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி கடைகளுக்கு ஆரணி, பெங்களூரு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து தற்போது வரும் அரிசி மூட்டைகள் 26 கிலோவாகவே வருகிறது.

    இதனால் பொதுமக்க ளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதே சமயம் 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மூட்டைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.

    ×