search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுந்தலம்"

    • சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது சாகுந்தலம்.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    சாகுந்தலம்

    இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி வைத்துள்ளது. அதன்படி, படத்தை 3-டியில் மாற்ற உள்ளோம். இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது'' என்று படக்குழு தெரிவித்துள்ளது.


    • சமந்தா தற்போது குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

     

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
    • இவர் தற்போது நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வரும் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து வருகிறது. ஆனால் குணசேகர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் பணிகள் முடிந்து விட்ட பிறகும் அடுத்தக்கட்ட தகவல் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

     

    இது தொடர்பாக இயக்குனர் குணசேகர் கூறியதாவது, இந்த படம் புராண இதிகாசமாக இருப்பதால் படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கிறது. இதற்கான பணிகளால் தான் தாமதம் ஆகிறது என்று கூறியிருக்கிறார். சாகுந்தலம் படத்தை சமந்தா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருப்பதால் விரைவில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ×