search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 253625"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசே கரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பா ளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் பகுதி யில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்க ளுக்கு இந்த தீ வைப்பு சம்ப வத்தில் தொடர்பு இருக்க லாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறை களுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிஇன்று முதல் வழங்கப்படுகிறது.
    • இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 75-வது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் நிகழ்வுக்காக நிதி சேகரிக்கப்பட்டது.

    நகரில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக ரூ.1 லட்சம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ 75 ஆயிரத்தை வழங்கினார்்கள். மேலும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

    இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

    இன்று முதல் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு அலுவலர் சேகரன், உதவி பொறியாளர்கள் கோமதி, ராஜேஷ், மேலாளர் ஜோதி–மணி ஆகியோர் மேற்பார்வை–யில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.

    ×