search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்து விளக்கு பூஜை"

    • 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.
    • மங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    ஓசூர்,

    ஒசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தம்ப்ராஸ்) கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், உலக மக்கள் நலனுக்காக 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.

    ஓசூர் பழைய ஏ.எஸ் டி..சி.பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சுதா நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    மேலும் இதில், மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராகவன், ரோகினி கணேஷ், நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நடராஜர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்தநிலையில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.

    திருச்சி :

    திருச்சி தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து அம்மனுக்கு கரகம் பாலித்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்வு நடக்கிறது. 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை குட்டிகுடித்தல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு அம்மன் திருத்தேர் வீதிஉலாவும் நடக்கிறது.

    இந்தநிலையில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண் பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×