என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"
- ஆவணித் திருவிழா வரும் 17-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.
- திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் புகாரி தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கமிஷனர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, நகரில் 8 இடங்களில் நகராட்சி சார்பில் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கப்படும். விழா நாட்களில் 120 தூய்மைப் பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்றுவது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக 400 போலீசாரை பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும், முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, தங்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்வது, என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அம்பிகாபதி, தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி. அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ண ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த திருவிழா 23-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- 4-ந்தேதி சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 23-ந் தேதி காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அன்றைய தினத்தில் இருந்து 28-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகர் சுவாமி வீதி உலா நடைபெறும்.
இதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் 29-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 30-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 31-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.
4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 9-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இத்திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
- தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோவிலில் இருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, வீதிஉலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தது.
பின்னர் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு குட்டி ராஜா வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், மணியம் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டார்.
திருவிழா காலங்களில் தினசரி காலையும், மாலையும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதேபோல் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்