என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரு தரப்பினர்"
- பெண் கைது
- 4 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள கல்லங்குழி பகுதியில் வசித்து வருபவர் ஜெயகடாட்சன் (வயது 50). அந்த பகுதியில் தொழில் செய்து வருகிறார் இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அருள்ராஜ் (45). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வருகிறார்.
பெருஞ்சகோணம் பகுதியை சேர்ந்தவர் பேலிஸ் (54). இவருடைய மனைவி வசந்தா, மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை ஆகியோருக்கும் ஜெயகடாட்சனுக்கும் பாதை தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெயகடாட்சன் அந்த பகுதியில் வரும்போது பேலிஸ் அவரை வழிமறித்து தகராறு செய்தார் இதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இவருக்கு ஆதரவாக அருள்ராஜ் சென்று சமதானம் செய்ய சென்றார்.
இதில் பேலிஸ் மனைவி மகன் உறவினர் சேர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பலத்த காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயகடாட்சன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பேலிசின் மனைவி வசந்தாவை கைது செய்தனர் பேலிஸ் மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.
- தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார்.
- எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி ரோட்டு பொட்டவெளி சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார். அப்போது மீனை நாய் தூக்கி கொண்டு ஓடிய போது சரவணன் அதனை கல்லால் தாக்கினார். அப்போது அந்த கல் எதிர்பாராமல் எதிர் வீட்டில் பட்டுவிடுகிறது. இதனால் எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரசன்னாவின் உறவினர் அனிதா என்பவர் சண்டையை விளக்கி விடும்போது, சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் அனிதாவை சரமாரி தாக்கி மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது .
இது மட்டுமின்றி இரு தரப்பினருக்குள் கடும் மோதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அனிதா மற்றும் சரவணன் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் அனிதா கொடுத்த புகாரின் பேரில் சரவணன் உள்பட 5 பேர் மீதும், சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா உள்பட 5 பேர் மீதும் என 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
- ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள தையூர் என்ற கிராமத்தில் வேம்பியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை நேற்று மதியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே தாங்கள் தான் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அதனால் நாங்கள் உண்டியலை திறந்து எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தாங்கள்தான் கோவிலை நிர்வகித்து வருவதாகவும் தாங்கள் போட்ட பூட்டை தென்னரசு தரப்பினர் உடைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் மேற்படி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தற்போதைய தலைவர் திருமுருகன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திருமுருகன் தரப்பினர் சாலை மறியலை கைவிட்டனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- வார்டு மக்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஸ்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையத்தில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் அந்த வார்டு மக்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஸ்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
இதில் கோவிலில் தன்னை வழிபட அனுமதிக்கவில்லை எனக் கூறி சுகன்யா ஜெகதீஷ் தரப்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா கணவருடன் சேர்ந்து மிரட்டுவதாக மற்றொரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், விக்னேஸ்வரன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகள் குறித்து வாட்ஸ் அப்பில் குறிப்பு வைத்திருந்ததாகவும் அதனை, வெங்கடேஷ் என்பவர் தட்டிக் கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதுகுறித்து விக்னேஸ்வரன் மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷ், ரங்கராஜ், செல்வராஜ், மற்றும் சிலர் மீதும், இதேபோல வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் விக்னேஸ்வரன், ஆனந்தி, ஜெகதீஷ், தர்மலிங்கம் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்