என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெய்லர் தற்கொலை"
- வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை சண்முகம் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
- இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மேற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (56). டெய்லர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக அவரை கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகளும், மகனும் இறந்த சோகத்தில குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் மைனர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 43). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லலிதா (41). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகனும், அனிதா (17) என்ற மகளும் இருந்தனர்.
மகேந்திரன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒரே மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் மேலும் ஒரு பேரிடி விழுந்தது. அனிதாவும் உடல் நலக்குறைவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகனும் மகளும் இறந்து விட்ட சோகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமகிருஷ்ணன் தனது மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் எஸ்.எஸ்.ஐ. கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்