search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தலைமறைவு"

    • புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று விசாரணை செய்தார்.
    • வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    இவர் வாய் பேச முடியாத நிலையில் சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. இவரது தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். தாய் அதே ஊரில் கூலி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனியாக வீட்டிலிருந்த போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜா (வயது 24) அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    அப்போது இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ராஜா பாலியல் தொந்தரவு செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரிடமிருந்து இளம்பெண்ணை காப்பாற்றினர்.

    இது குறித்து தட்டி கேட்டவர்களுக்கு ராஜா கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். எனவே இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா விரைந்து சென்று விசாரணை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓட்டலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றை திருடி சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முகமது ஷெரீப் என்பவர் வந்து, தான் ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் உதவியாளர் என்று கூறி அறையை எடுத்து தங்கினார்.

    சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய அவர் கடந்த நவம்பர் 20-ந்தேதி தகவல் தெரிவிக்காமல் ஓட்டலை விட்டு வெளியேறினார்.

    ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நவம்பர் 20-ந்தேதி வரை தங்கிய அவர் ரூ.11.5 லட்சம் கட்டணம் செலுத்தி இருந்தார். பாக்கி தொகை ரூ.23 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில் அவர் மாயமானார். மேலும் ஓட்டலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றை திருடி சென்றார்.

    பின்னர் அவர் கொடுத்த ஆணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வந்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா பகுதியில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட முகமது ஷெரீப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்மமனிதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
    • ஓட்டலில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான அவனது உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி மாடர்ன் உடையில் வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் தான் அரபு நாட்டை சேர்ந்த வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தொழில் விஷயமாக டெல்லி வந்துள்ளேன் என்றும் கூறி அறை கேட்டார்.

    தன்னுடைய பெயர் முகமது ஷெரீப் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய அடையாள அட்டையையும் அவர் காட்டினான். அவன் டிப்-டாப்பாக இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள் அவனுக்கு அறை ஒதுக்கி கொடுத்தனர். அந்த வாலிபர் தொடர்ந்து 4 மாதங்கள் அந்த ஓட்டலில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான். 4 மாதம் கழித்து அவன் அறையை காலி செய்வதாக கூறினான். இதற்கு அறை வாடகை ரூ. 35 லட்சம் வந்தது. ஏற்கனவே அந்த வாலிபர் 11.50 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தான். மீதம் ரூ.23 லட்சம் என வந்தது.

    இதற்காக அவன் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தான். அவனை ஓட்டல் ஊழியர்கள் முழுமையாக நம்பியதால் அந்த காசோலையை வாங்கி கொண்டனர். ஆனால் வங்கியில் செலுத்திய போது அதில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவன் தங்கி இருந்த அறையில் சோதனை செய்த போது அங்கிருந்த வெள்ளி பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் காணாமல் போய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவன் ஓட்டலில் கொடுத்து இருந்த அடையாள அட்டை போலியானது என்றும் அவன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் என பொய் சொல்லி ஏமாற்று வேலையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான அவனது உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.

    • பெண் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர்.
    • பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர்.

    அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால் முகவரிக்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சம்பவத்தன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிய போது, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர். பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பெண்ணுடன் தங்கி இருந்தவர் தலைமறைவாகி உள்ளார். எனவே அவர் தான் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.

    எனவே தலைமறைவானவர் சிக்கினால் தான் உண்மையான முகவரி தெரிய வரும். அவர் எங்கு சென்றார்? கொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி தானா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ரேபள்ளியில் அரசு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மணி குமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவரது 8 வயது மகள் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமி படிக்கும் 3-ம் வகுப்பிற்கு சுஜாதா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமி சரிவர படிக்காததால் சுஜாதா சிறுமியை பிரம்பால் அடித்து உள்ளார். இதனால் சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தந்தையும் அதே பள்ளியில் வேலை செய்து வருவதால் அவர்கள் சிறுமியை சமாதானம் செய்தனர்.

    இருப்பினும் சிறுமி அவரது தாய் மாமாவான ஜித்தினிடம் தெரிவித்தார். மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜித்தின் ஆசிரியை மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த மற்றொரு ஆசிரியர் மற்றும் காவலாளி மீதும் தாக்குதல் நடத்தினார். கல்விசி தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜித்தின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனைக் கண்ட மற்ற ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு ரேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரே பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரிய நாராயணா வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜித்தினை தேடி வருகின்றனர்.

    ×