search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 257541"

    • சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்படுகின்றன.
    • பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.

    கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    • சில வியாபாரிகள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஒதுக்கப்பட்டுள்ள வார சந்தைக்கான இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைத்து வியாபாரிகளும் வார சந்தைக்குள் எடுத்துச் சென்றனர்.

    பாப்பிரெட்டிபட்டி.

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரசந்தை கூடும், இந்த மாவட்டத்தில் பிரபலமான வார சந்தையாகவும், பேரூராட்சிக்கு நல்ல வருவாய் ஈட்டும் சந்தையாகவும் இருந்து வருகிறது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கும் பணியை பல லட்சம் செலவில் செய்திருந்தது, பணிகள் நிறைவடைந்து சில மாதங்களாக பயன்பாட்டிற்கு வராததால் வியாபாரிகள் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை முழுவதும் கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தனர்.

    இது குறித்து மாலைமலர் செய்தி அண்மையில் வெளி யிட்டிருந்தது, இதையொட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து வார சந்தையை திறந்து வைத்து பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அனைத்தையும், வார சந்தைக்கு ஒதுக்க ப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்து செல்லுமாறு வியாபாரிகளுக்கு வலியுறுத்தினர்.

    சில வியாபாரிகள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார சந்தைக்கான இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைத்து வியாபாரிகளும் வார சந்தைக்குள் எடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் வாரச்சந்தை புதுப்பிக்க ப்பட்டுள்ள பகுதிகளில் சிலர் இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுத்தால் மட்டும்தான் இடம் ஒதுக்கி தருவோம் என மிரட்டி வருவதாகவும் வியாபாரிகள், காவல் துறை, பேரூராட்சி அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கையின் போது பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர்கள் சக்திவேல், மாரப்பன் மற்றும் போலீசார் போரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இச் சம்பவத்தால் பொம்மிடி பேரூராட்சி வார சந்தை முக்கிய சாலையில் காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.

    இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.

    எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன.
    • நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வழியாக திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. இந்த லாரிகள் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி, மைக்கல்நாயக்கன்பட்டி தாண்டி செல்லும்போது, மர்ம நபர்கள் நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    அதன்படி கடந்த 20 நாட்களில் 12 லாரிகளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான மசாலா பாக்கெட்டுகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து திருச்சி மற்றும் கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று நாமக்கல் மாநில லாரி உரிமையாளர் செயலாளர் வாங்கலியை சந்தித்தும் முறையிட்டனர். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், மசாலா பாக்கெட்டுகள் மட்டுமின்றி சோப்பு, பொடி ஏற்றி வரும் லாரிகளையும் குறி வைத்து நாமக்கல் பகுதியில் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. லாரி லோடு ஏற்றிய பின் அதை உரியவரிடம் ஒப்படைப்பது லாரி உரிமையாளர்களின் பொறுப்பாகும். ஆனால் வழியில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடப்பதால் லோடு ஏற்றிய நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    போலீஸ் நிலையங்களில் எங்களின் புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுக் கொடுத்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து நாங்கள் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. இது போன்ற வழிப்பறி கொள்ளைகள் இரவு நேரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து தான் லாரி டிரைவர்கள் பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

    தமிழக அரசு இதுபோன்று லாரியில் திருட்டு நடந்தால், எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறதோ அதன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

    மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் இரவு நேரங்களில் கடந்த ஒரு மாதமாக போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லை. இதனால் அந்த பகுதியில் திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் பிரச்சினையை அறிந்து ஓடும் லாரியில் நடைபெறும் திருட்டுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • விருதுநகரில் பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அண்மை காலமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோதிகள் ரேசன் அரிசியை வாங்கி அதனை ஆலைகளில் பாலீஷ் செய்து மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரம் பாலத்தின் கீழ் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது பாலத்தின் கீழ் கிட்டங்கி அமைத்து ரேசன் அரிசி பதுக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த 1,880 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் 

    ×