என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு மையம்"
- பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்.
- இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தற்போது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 49 மீனவ கிராமங்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக மாண்டஸ் புயல் உருவானது முதல் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் ஓரமாக உள்ள அனைத்து படகு களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது. வழக்கத்தை விட அதிக அளவில் கடல் அலை சீற்றம் காணப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் காற்று அதிக அளவில் வீசினால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க வேண்டும். அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது. மேலும் கடல் பகுதியில் சுமார் 14 அடி உயரத்திற்கு கடல் அலை ராட்சத அலையாக மாறி கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. அதன் காரணமாக சுமார் 50 அடி முதல் 60 அடி கடல் அலைகள் முன்னோக்கி வந்து செல்வதால் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் அனைத்தையும் காலை முதல் மீனவர்கள் ஊர் பகுதிக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ராட்சத அலை மற்றும் கடல் நீர் முன்னோக்கி வந்து செல்வதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- போதைப்பழக்கத்தின் தீமைகள், குழந்தைகள் உதவி எண் குறித்து அமைச்சர் கீதாஜீவன் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, மகளிர் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி நிறுவுதல் நிகழ்ச்சி மற்றும் உள்ளக புகார் குழு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்தது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டவற்றை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறியாமல் பேசிவருகிறாா். அவருக்கு நடைமுறை தெரியவில்லை. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு சூழ்நிலையை உறுதிப்படுத்த முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சமூநலத்துறை முறைப்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்ப–டுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடங்களுக்குப் பதிலாக 1000 புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கட்டிடங்கள் கட்டப்படும். ராமநாதபுரம் வளரும் பட்டியலில் உள்ளதால் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், அரசுப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதுவரை இந்த திட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.181 மற்றும் 1098 அழைப்பதன் மூலம் அழைத்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதால் இது போன்ற அழைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது.
2015 முதல் 2020 வரை 15 ஆயிரம் அழைப்புகளும், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 16ஆயிரம் அழைப்புகளும் வந்துள்ளன. அனைத்து பள்ளிகளிலும் போதைப் பழக்கத்தின் தீமைகள், கல்வியின் அவசியம், குழந்தைகள் உதவி எண் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை திட்ட அலுவலர் விஷ்வாபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன், கீழக்கரை தி.மு.க.செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்