search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரஸ்வதி"

    • படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.
    • உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.

    துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

    பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

    காசியின் கருணைத்தாய்: சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

    • மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
    • ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    ஆன்ம ரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

    * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

    மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    • லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி.
    • தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார்.

    சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

    நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை:

    ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

    ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

    மஹாளய அமாவாசை கழிந்தது.

    இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

    சக்தி, நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி, விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம், உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

    ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

    சக்தியால் உலகம் வாழ்கிறது.

    நாம் வாழ்வை விரும்புகிறோம்.

    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    • நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும்.
    • நவராத்திரி முத்தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    சக்தியின் அருள் வேண்டி நோற்கும் விரதங்களில் மிக முக்கியமானது நவராத்திரியாகும். நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளும் சக்தியை துர்க்கை, மகாலட்சுமி சரஸ்வதி என பல்வேறு வடிவங்களில் வழிபடுவதாகும்.

    நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும்.

    நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி என்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

    காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும்.

    ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும்.

    விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் "தேவி மகாத்மியம்" என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது.

    நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும்.

    ஒன்பதாம் நாள் கலைமகள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும். பத்தாம் நாள் விஜய தசமி விழா (வாழை வெட்டு) நடைபெறும். பாடசாலைகளில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    • அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம்.
    • சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும்.

    தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம்.

    இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார்.

    சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

    இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.

    சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.

    இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை) யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்.

    • படிப்பில் சிறந்த விளங்க சரஸ்வதியை வணங்க வேண்டும்.
    • சரஸ்வதி வித்தியாசமான வடிவில் காட்சி தரும் கோவில்களை அறிந்து கொள்ளலாம்.

    வாணியம்பாடி சரஸ்வதி

    வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது, வாணியம்பாடி. இங்குள்ள அதிதீஸ்வரர் கோவிலில், சரஸ்வதிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. பிரம்மதேவனின் சாபத்தால் பேசும் தன்மையை இழந்தாள், சரஸ்வதி. அந்த சாபம் நீங்குவதற்காக, இத்தலம் வந்த சரஸ்வதி தேவி, ஆலயத்தில் அருளும் பெரியநாயகி அம்மனையும், அதிதீஸ்வரரையும் வணங்கி சாபம் நீங்கப் பெற்றாள். இறைவனை நினைத்து சரஸ்வதி இசை மீட்டி பாடிய தலம் என்பதால் இந்த ஊருக்கு 'வாணியம்பாடி' என்ற பெயர் வந்தது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை, காலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. கோவிலுக்குள் தனிச் சன்னிதியில் வீணை ஏந்திய வாணி அருள்பாலிக்கிறார்.

    வேதாரண்யம் சரஸ்வதி

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்பாலிக்கும் சரஸ்வதிக்கு, வீணை இல்லை. வேதங்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்ட தலம் என்பதால், இதற்கு 'வேதாரண்யம்' என்று பெயர். இத்தல அம்பிகையின் பெயர் 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும். இந்த அன்னையின் குரல் யாழை விட இனிமையானது என்பதால் இந்தப் பெயர் வந்தது. மேலும் அன்னையின் குரல் தன்னுடைய யாழை விட இனிமையானதாக இருந்த காரணத்தால், இங்குள்ள சரஸ்வதிதேவி தன்னுடைய கையில் வீணை இல்லாமல் அமர்ந்திருக்கிறார்.

    கூத்தனூர் சரஸ்வதி

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் சரஸ்வதி ஆலயம் ஒன்று உள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், கலைமகளை வழிபட நினைத்தார். அதற்காக இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டி வழங்கப்பட்ட ஆலயம் இது. இக்கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா விஜயதசமி. அன்றைய தினம் காலை சரஸ்வதி தேவிக்கு, ருத்ராபிஷேகம் நடைபெறும். பள்ளி மாணவ -மாணவிகள் தோ்வில் வெற்றி பெறவும், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அந்த குழந்தை படிப்பில் சிறந்த விளங்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

    • விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
    • பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

    சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

    சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

    சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

    எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சச்இவர்ணம் சதுர்புஜம்!

    பிரசந்த் வதனம் தீயாயேத்

    சர்வ விக்நோப சாந்தயே'

    என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

    சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

    பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
    • நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்...

    ஓம் அறிவுருவேபோற்றி

    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

    ஓம் அன்பின் வடிவே போற்றி

    ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி

    ஓம் அறிவுக்கடலேபோற்றி

    ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி

    ஓம் அன்ன வாகினியேபோற்றி

    ஓம் அகில லோக குருவேபோற்றி

    ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி

    ஓம் ஆசான் ஆனவளேபோற்றி

    ஓம் ஆனந்த வடிவேபோற்றி

    ஓம் ஆதாரசக்தியேபோற்றி

    ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி

    ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி

    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

    ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி

    ஓம் உண்மைப் பொருளே போற்றி

    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

    ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

    ஓம் குணக் குன்றானவளே போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

    ஓம் சாந்த சொரூபினியே போற்றி

    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

    ஓம் சாரதாம்பிகையே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சித்தியளிப்பவளே போற்றி

    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

    ஓம் சுத்தஞான வடிவே போற்றி

    ஓம் ஞானக்கடலானாய் போற்றி

    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

    ஓம் ஞானேஸ்வரியே போற்றி

    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

    ஓம் ஞான ஆசிரியையே போற்றி

    ஓம் ஞானத்தின் காவலே போற்றி

    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

    ஓம் தகைமை தருபவளே போற்றி

    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

    ஓம் தாயான தயாபரியே போற்றி

    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

    ஓம் நவமி தேவதையே போற்றி

    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

    ஓம் நன்னெறி தருபவளே போற்றி

    ஓம் நலம் அளிப்பவளே போற்றி

    ஓம் நாவிற்கு அரசியே போற்றி

    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

    ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

    ஓம் நான்மறை நாயகியே போற்றி

    ஓம் நாவில் உறைபவளே போற்றி

    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

    ஓம் பண்ணின் இசையே போற்றி

    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

    ஓம் பிரணவ சொரூபமே போற்றி

    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் பூரண வடிவானவளே போற்றி

    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

    ஓம் மங்கல வடிவானவளே போற்றி

    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

    ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

    ஓம் மேதையாக்குபவளே போற்றி

    ஓம் மேன்மை தருபவளே போற்றி

    ஓம் யாகத்தின் பலனே போற்றி

    ஓம் யோகத்தின் பயனே போற்றி

    ஓம் வழித்துணை வருவாய் போற்றி

    ஓம் வரம் அருள்பவளே போற்றி

    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

    ஓம் வாக்கின் நாயகியே போற்றி

    ஓம் வித்தக வடிவினளே போற்றி

    ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

    ஓம் வெண்தாமரையினாளே போற்றி

    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

    • தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான்.
    • பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.

    படைப்பு கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், அனைத்தையும் தூய்மைப்படுத்துவதாகவும் நீரை குறிப்பிடுகிறார்கள்.

    ஆறாக (நீராக) உருவகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாவார். பேச்சுக்கலை, எழுத்துக்கலை என கலைகளுக்கெல்லாம் கடவுளாகவும் சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார்.

    அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை உடையது. அவ்வாறே அறியாமை இருளை அறிவு, ஆற்றலால் அகற்றி சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி தேவி. இவருக்கு என தனிக்கோவில்களை காண்பது அரிது.

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்துக்கு அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு என தனிக்கோவில் உள்ளது. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் இக்கோவிலின் முன் மண்டபம் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

    மூலவராக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை தரிசிக்க கண் கோடி வேண்டும். அறிவு அருள் மலரும் அவருடைய கோலத்தை தரிசிக்க தரணி முழுவதிலும் இருந்தும் மக்கள் கூத்தனூரில் திரள்கிறார்கள். இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சங்கமித்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தனது அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதாகவும், அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி தேவியை மகாகவி பாரதியாரும் தரிசனம் செய்து உளளார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். சரஸ்வதி தேவிக்கு முன்னால் உள்ள அன்ன வாகனத்தில் நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

    பள்ளியில் சேர்க்கும் முன்பாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல் மணியில் 'அ' எழுத பழகி கொடுக்கிறார்கள். இதற்காக பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.

    கல்வி வரம் தருபவராக சரஸ்வதி அம்மன் இங்கு அருள்பாலிப்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வு நாளில் அம்மனை தரிசிக்க தவறுவதே இல்லை. தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாக கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு.
    • கீழ்கண்ட சுலோகத்தை 3 முறை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

    வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு. இதனால் மாணவர்கள் சிலர், குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை உருவாகின்றது. மாணவ - மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

    'சரஸ்வதி நமோஸ்துப்யம்

    வரதே காம ரூபிணி

    வித்தயாரம்பம் கரிஷ்யாமி

    ஸித்தர் பவது மேஸதா'

    ×