search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறியடி"

    • இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
    • குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.

    அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.

    பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.

    இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.

    குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.

    பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.

    விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.

    மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.

    தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.

    தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.

    • இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.

    சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.

    அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.

    அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.

    அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.

    இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    • நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
    • ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்

    கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.

    தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.

    நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.

    ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.

    அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.

    கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.

    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.

    கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.

    ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

    • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

    சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

    பகலில் விரதம் இருக்க வேண்டும்.

    இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    • ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
    • இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    துர்க்கையாக மாறிய பெண் குழந்தை

    எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.

    ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.

    குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.

    அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.

    இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.

    நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.

    அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.

    தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

    பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.

    கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.

    கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.

    • பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
    • நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை

    குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.

    தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,

    "கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.

    வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.

    கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.

    தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.

    கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.

    வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.

    மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.

    பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.

    வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.

    காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.

    காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.

    உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • 'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார்.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார். இவர் தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ரிச்சா ஜோஷி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.


    படக்குழு

    மேலும், இந்த படத்தில் 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகக்து. 

    • வழுக்கு மரம் ஏறுதல் அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.
    • இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    தஞ்சாவூர்:

    கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி தஞ்சை மேலவீதியில் 22-வது ஆண்டாக உறியடி திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல்,கோபூஜை ஆகியவையும் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சி யான உறியடி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    வழுக்கு மரம் ஏறுதல் அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.

    இதையடுத்து இளைஞர்கள் போட்டி போட்டு க்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    இதனை திரளான பொது மக்கள் கண்டு களித்தனர். முன்னதாக கிருஷ்ணன் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை உறியடி குழு தலைவர் கோபால், செயலாளர் சரத்யாதவ் மற்றும் யாதவ கண்ணன் பக்த கோடிகள் மற்றும் தஞ்சை ராஜாக்கோட்டை யாதவர்கள் செய்திருந்தனர்.

    ×