என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளையாட்டுப் போட்டிகள்"
- மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர்.
- 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் கிராமங்களுக்கு இடையேயான வாலிபால், துரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது.
162 இடங்களில் நடைபெறும் முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகளும் மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் 70 இடங்களிலும், த்ரோபால் போட்டிகள் 24 இடங்களிலும் நடைபெற்றது.
இதில் 6,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 30,000 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டிகளில் 22,522 வீரர்களும், துரோபால் போட்டிகளில் 5,098 பெண்களும் போட்டிகளில் விளையாடினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சென்னை பூந்தமல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி, திருத்தணியில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் நேரில் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
அதேபோன்று ஒசூரில் போட்டிகளை மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயனி தொடக்கி வைத்தார்.
அதுமட்டுமின்றி மதுரை கள்ளந்தரி மற்றும் காரைக்குடி புதுவயல் பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த போட்டிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகள் அடுத்து டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், ஈஷா கிராமோத்சவ திருவிழா ஆண்டுதோறும் கிராமப்புற விளையாட்டுகள், கிராமிய கலைகள் மற்றும் உணவு முறைகளை கொண்டாடி புத்துயிர் அளிக்கும் விதமாகவும், உற்சாகமான கிராமிய வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.
- போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தென்காசி இ.சிஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
- ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாங்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என 100 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இங்கு வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், தமிழ் ஆசிரியர் முனியப்பன் உள்ள ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாங்கரை உடற்கல்வி ஆசிரியர் குப்பாகவுண்டர் நன்றி கூறினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்யப்பட்டது.
- காவல்துறை, சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
- துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி காவல் நிலையம் அருகில் காவல்துறை, சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் பெற்றோர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்
- மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது
போளூர்:
போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
போளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி முக்கிய வீதி வழியாக சென்றது சாரண சாரணியர் மற்றும் பல மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு போளூர் ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை அடைந்த தீபச்சுடரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ராம ஜெயம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ஏழுமலையிடம் கொடுத்தனர்.
பின்பு சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாணவ, மாணவி களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வு சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டார்.
மேலும் அவர் பேசுகையில்:-
மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் விளையாடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பின்பற்றலாம் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி பிரமிடுகள் போன்றவை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.ஆர்த்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆண்டனி தாமஸ் நன்றி கூறினர்.
- வண்ண வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி,
மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் அனிதா முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் குணசேகரன், சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் அனைத்து மாவட்ட மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வண்ண வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ராஜகோபால், மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பேரூராட்சியில் தலைவர் பி.சி.ஆர். மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உனக்காக நல்லாம்பட்டி அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்றது.முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் நன்றி கூறின
- 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
- போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன. ஆண்-பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் என 50 வகையான போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், 12 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப் பநந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மேலும், 17 வயது முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, கையுந்துப்பந்து, மேசைப்பந்து போட்டிகளி லும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, செஸ் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும்.
மாவட்ட அளவிலானப் போட்டிகளில் தனிநபர்
பிரிவில் வெற்றிப்பெறு பவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 - எனவும், இரட்டையர் பிரிவிற்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கையிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தலாரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படும் விளையாட்டு வீரர் வீராங்க னைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
- இவ்விழாவில் குமராபாளையம் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி நிறுவனர் விஜயகுமார் தலைமையில் அப்பள்ளியின் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் குமராபாளையம் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி நிறுவனர் விஜயகுமார் தலைமையில் அப்பள்ளியின் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளிகள், தொண்டு நிறு வனங்கள் சார்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
- மாணவர்கள் இடையே நட்புறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- மருத்துவ பணியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு மியூசிக் சேர், வலைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
கடத்தூர்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழாவையடுத்து கடத்தூரில் மருத்துவ பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நட்புறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக கடத்தூர் அரசு மருத்துவமனை முன்பிருந்து மாணவர்களின் பேரணி நடந்தது. பேரணியை கடத்தூர் அரசு மருத்துவர் கனல்வேந்தன் துவக்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு இடையே ஸ்ரீ அய்யப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றது.
இதில் மாணவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்களுக்கு இடையே கைப்பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு மியூசிக் சேர், வலைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியைச் சேர்ந்த அன்பு, பேராசிரியர்கள் ஐயப்பன், ஆம்ஸ்ட்ராங், விஜி உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகள் மற்றும் தனி நபர்களுக்காக பரிசுகளும் வழங்கப்பட்டது.
- சேலம் நகர்ப்புற மைய குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
- இந்த போட்டிகளில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
வாழப்பாடி:
சேலம் நகர்ப்புற (பி) மைய குறு வட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கடந்த மாத இறுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. கபடி போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
பூப்பந்து போட்டியில் இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் பிரிவில் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் மூத்தோர் தனி நபர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் இரட்டையர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் தனி பிரிவில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
இப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் கவுதம், கின்னஸ் சாதனை சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பொதுப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களும் பாராட்டினர்.
- சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கடத்தூர் பள்ளியில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி திருவிழா போன்று இருந்தது.
- மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர் .
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன.
இதில் வாலிபால், புட்பால், கோ-கோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது .போட்டிகளில் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் கபடி, கால்பந்து, கைபந்து போட்டிகளில் பல வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன . கோ- கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியில் பொ.மல்லாபுரம்,பள்ளியும், டெணிகாய்ட் போட்டியில் தனிநபர் போட்டியில் ஸ்டான்லி பள்ளியும், இரட்டையர் பிரிவில் புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியும் வெற்றி பெற்றது. ஜூனியர், சீனியர் பிரிவுகளுக்கான போட்டிகளும் தனித்தனியே நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கடத்தூர் பள்ளியில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி திருவிழா போன்று இருந்தது. மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர் .
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கடத்தூர் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். வட்டார உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளுக்கான நடுவர்களாக இருந்து நடத்தினர்.
- கைப்பந்து, கபடி, கோகோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி,
தருமபுரி சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
கைப்பந்து, கபடி, கோகோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 70 அணிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்த போட்டிகளை முன்னிட்டு நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை ஏலகிரி பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோன்று தருமபுரி சரக அளவில் மாணவிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் (நாளை) வெள்ளிக்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்