search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் திருவிழா"

    • மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிரமராம்மா தேவி, மல்லிகார் ஜுன துர்கம் மலைகோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.

    விழாவில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நாகராஜ், குமரன் அகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    விழாவில் கோவில் திருவிழா கமிட்டியினர், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப்பள்ளி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் வழங்கபட்டது

    ஆரணி:

    ஆரணிஅடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 151-வது ஆண்டு தேரோட்ட பிரம் மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி காப்பு காட்டுதலுடன் தொடங்கியது,

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டன.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்கு மார் உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த திருத்தேர் மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் ஆகியவை வழங்கபட்டது.

    • 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
    • அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.

    அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் பிரசித்திப்பெற்ற இந்த விழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தாண்டு தேர்த்திருவிழா ஒரு வார விழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக கரியராமர் கோவிலிலும், அடுத்தடுத்து வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பிரசித்திப் பெற்ற வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    இந்தவிழாவில் வெங்கட்டராமர், அண்ணாமலையார், காளியம்மன் உற்சவ மூர்த்திகளை 2 பல்லக்குத் தேர்களில் ரதமேற்றி, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினர். மாவிளக்கு ஊர்வலம் நடத்திய பெண்கள் 'குலவை' குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இத்திருவிழாவில் பங்கேற்ற, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிர்ந்து அசத்தினர்.

    இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள 3 மலைக்கோவில் திருவிழாவிற்கும் ஆண்டு தோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலை கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் கோவில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறுயும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றனர்.

    • 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சேமலை கவுண்டம்பாளையத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா கடந்த 26-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் மற்றும் அலகுமலைக்கு சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர்களின் உபயத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதன் பின்னர் வலுப்பூர் அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் பகுதியில் துவங்கி வலுப்பூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து வலுப்பூர் அம்மனுக்கு, பால், சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.

    • பல்வேறு வண்ண மலர்களால் தேர் அலங்காரம்
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்ப லூர், கிராம தேவதையான பனையம்மன், கோவில் தேர் திருவிழா நடந்தது.

    காலையில் பனையம்ம னை பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகங்கள் செய்து, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்துசிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பின்னர் திருத்தேரை பல்வேறு வண்ண மலர்கள், வண்ணத்துணிகள், ஆகியவை மூலம் அலங்காரம் செய்து வைத்து வாழைமரம் மா இலை, நுங்கு, இளநீர், ஆகியவை தேரில் கட்டி வைத்து அலங்காரம் செய்தனர்.

    பின்னர் உற்சவர் பனையம்மனை, திருத்தேரில் வைத்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தேரை இழுத்தனர்.

    பனையம்மன், திருத்தேர் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் உள்ள மாடவீதி வழியாக ஊர்வலம் வந்தது.முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், பாண்டுரங்கன், திருத்தேர் வடம் பிடித்து இழுத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் பெரணமல்லூர், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணைதலைவர் லட்சுமி லலிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்திய பிரியா நடராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்தேர் விழா ஏற்பாடுகளை.பெரண மல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் காமாட்சி வெங்கடேசன், செய்திருந்தார்.

    ×