search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் நார்"

    • அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் செய்யது முகமதுவின் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
    • நேற்று இரவு திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் அச்சன்புதூரை சேர்ந்த செய்யது முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்கி அதன் கூந்தல் நார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். தேங்காய் நார் தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள், தேங்காய் நார் தும்பைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. 

    • லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசமானது
    • ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் தங்கசாமி மகன் ரெங்கசாமி (வயது 58) இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.

    லாரி படேல் நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற மின் வயரில் தேங்காய் நார் உரசியது. இதில் தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறி அடித்து ஆலங்குடி தீயணைப்பு துறை, ஆலங்குடி போலீஸ் மற்றும் மின்சாரதுறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் சில பகுதியும் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதாரமடைந்த லாரியின் மதிப்பு ரூ.4 லட்சம் என்றும் தேங்காய் நார் ரூ.1 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழுவினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண் டு வந்தனர். மேலும் லாரி முற்றுலும் எரிந்து நாசமானது . லாரியின் மதிப்பு 4,லட்சமும் தேங்காய் நார் மதிப்பு சுமார் 1 -லட்சம் இருக்கும் என்று மதிப்பீட்டு கூறப்படுகிறது.

    ×