என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "8 வாலிபர்கள் கைது"
- சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி கூகலூர் மண்ணுவகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் கோபி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கூகலூர் ராமன் வீதியை சேர்ந்த முருகேஷ் (25), அதேபகுதியை சேர்ந்த குமார் (26), முத்துக்குமார்(25), சசி (25), மூர்த்தி(27), ஆனந்தன்(31), திருமூர்த்தி (24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டினை பறிமுதல் செய்தனர்.
- திண்டுக்கல்லில் சிலர் சட்டவிேராதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக ஐ.ஜி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞ்சா கடத்திலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் சிலர் சட்டவிேராதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக ஐ.ஜி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் அம்பாத்துரை அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.
கேரளா பதிவெண் கொண்ட அந்த காரில் 2 கிலோ கஞ்சாவை வாலிபர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. காரில் வந்த கேரளாவை ேசர்ந்த சதீஸ்குமார் (25), தங்கராஜ் (28), நிலக்கோட்டையை சேர்ந்த சிவபெருமாள் (25), காளனம்பட்டியை சேர்ந்த வீரமணி, கூலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி ஆகிய 5 பேர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் செம்பட்டி அருகே வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கூலம்பட்டியை சேர்ந்த பிரவீண் (22) என்பவரது வீட்டில் அருண் (22), மற்றொரு அருண் (21) ஆகிய 2 பேரும் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்