என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புட்டுத்திருவிழா"
- மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டார்.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா நாளை (27-ந்தேதி) நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் புட்டுத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், புட்டுத்திருவிழா ஆகிய 2 திருவிழாக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நாளை நடைபெற உள்ள புட்டுத்திரு விழாவில் பாண்டிய மன்ன னாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இன்று காலையில் மதுரைக்கு புறப்பட்டார்.
முன்னதாக சுப்பிர மணியசுவாமி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை பல்லக்கில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண்களில் எழுந்தருளி மதுரைக்கு செல்வர்.
புட்டுத்திருவிழாவில் பங்கேற்கும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 31-ந்தேதி வரை மதுரை ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 31-ந்தேதி மாலை பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மீண்டும் திருப்பரங்குன்றத்தை வந்தடைவார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- மதுரை புட்டு திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டார்.
- சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி மதுரையில் நடைபெறும் புட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நாைள புட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் இன்று காலை மதுரைக்கு பல்லக்கில் புறப்பட்டார்.
சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனால் சுவாமி வரும் வழிகள் திருவிழாகோலம் பூண்டிருந்தது.
புட்டுத்திருவிழா, சுவாமி புறப்பாடு, Puduthiruvizha, Swami departure,
- மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் 4-ந் தேதி புறப்படுகிறார்.
- திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது ''திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும்.
இந்த கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்தது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறுதல் லீலை, நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.
மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் மதுரைக்கு வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். வழி நெடுக மண்டகப் படிகளில் அருள் பாலித்து அன்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவார்.
திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்