search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
    • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மேற்குவங்காள வழக்கறிஞர்கள் கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது எனக்கூறியதுடன், நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

    • பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    இந்த குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கொல்கத்தா போலீசுக்கு உதவும் நண்பர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு மேற்கு வங்காள அரசு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கி வந்தது.

    இவருக்கு சமீபத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவ பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தார். அனைவரிடமும் இவர் தன்னை போலீஸ் என்றே அறிமுகம் செய்திருந்தார்.

    போலீஸ் என்று சொல்லி மிரட்டி இவர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கடுமையாக போராடியதால் அவரது கழுத்தை நெரித்து சஞ்சய் ராய் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்து உள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மருத்துவமனையில் இருந்து 3 டாக்டர்கள் போனில் தகவல் தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. அவர்களை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி கொல்கத்தா டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்குவங்காளத்தில் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதற்கிடையே மற்ற மாநிலங்களில் நேற்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்றும் 2-வது நாளாக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடந்தது.

    மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பயிற்சி டாக்டரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். ஆனால் குற்றவாளிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாப்பதாக பாஜக குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்கு பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று மாணவர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    • ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்றனர்.
    • வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் படுகொலை செய்யப்பட்டார்.

    பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.

    ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றனர். டாக்டர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலைக்கு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,

    தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.

    போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்திருந்தனர். வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. சீனியர் டாக்டர்கள்பணியில் இருந்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலை நோக்கி நடைபெற உள்ளது.

    • சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
    • சஞ்சய் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை  பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

     

     

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சம்பவத்தன்று அதிகாலையில் அவன்  மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது.

     

    இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.

    பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இளம் பயிற்சி பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தே கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 8-ந்தேதி அன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் அவர் மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதும் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

    பெண் டாக்டரை கற்பழித்துக் கொன்ற நபர் சைக்கோ போல செயல் பட்டிருப்பதும் டாக்டர்களின் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டரின் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் ராய் என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெண் டாக்டரை கற்பழித்து கொன்றதாக சஞ்சய் ராய் மீது குற்றம் சாட்டப்பட்டு கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய செல் போனை ஆய்வு செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இணைய தளங்களிலும் சஞ்சய் ராய் ஆபாச வீடியோக்கள் அடிக்கடி தேடிப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி ஆபாச படங்களை அடிக்கடி பார்த்து, பார்த்தே சஞ்சய் ராய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அளவுக்கு கொடூரமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் சக டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக நுழைந்தது எப்படி? என்பது பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    சஞ்சய் ராய் ஆஸ்பத்திரி வளாகத்தில் 'சிவிக் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக சென்று வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அன்று அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.

    சஞ்சய் ராய் புளூடூத் ஒன்றை பயன்படுத்தி பேசி வந்துள்ளார். ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது அவரது காதில் புளூடூத் இருந்துள்ளது. பெண் டாக்டரை கொலை செய்துவிட்டு தப்பி வெளியேறும்போது புளூடூத் இல்லை. இதுபற்றி சஞ்சய்ராயிடம் போலீசார் கேட்டபோது அவசரம் அவசரமாக வெளியேறியதில் புளூடூத் பயன்படுத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவு கோர்ட்டில் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறும்போது, பெண் டாக்டர் கொலை சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பணியில் உடனிருந்த டாக்டர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவோம் என்று தெரிவித்துள்ளார்..

    • மகேஷ் வர்மாவும், டாக்டரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர்.
    • மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் மாங்காபேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண் டாக்டர். இவர் சிக்பல்லாபூரிலுள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டராக வேலை செய்து வந்தார். இவர் மருத்துவக் கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    இதேபோல் ஏட்டுரை சேர்ந்த மகேஷ் வர்மா என்பவரும் அதே பஸ்சில் தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது மகேஷ் வர்மாவுக்கும், டாக்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    இதையடுத்து மேற்படிப்பிற்காக டாக்டர் சிப்பல்லூரிலேயே தங்கி இருந்தார். அங்கு சென்ற மகேஷ் வர்மா உன்னுடைய போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளேன் என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என பெண் டாக்டரை மிரட்டியுள்ளார்.

    மேலும் தனது உடலில் டாக்டர் பெயரை பச்சை குத்திக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன டாக்டர் மகேஷ் வர்மாவிடம் செல்போனில் உள்ள படங்களை அழித்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தனது ஆசைக்கு இணங்கினால் போட்டோக்களை அழித்து விடுவதாக மகேஷ் வர்மா தெரிவித்தார். இதனால் மகேஸ் வர்மாவின் ஆசைக்கு இணங்க டாக்டர் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து பெண் டாக்டரை பெங்களூரு அழைத்துச் சென்று அங்குள்ள லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பெண் டாக்டரை இந்துபூரில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். அப்போது மகேஷ் வர்மாவின் செல்போனில் உள்ள போட்டோக்களை அழிக்க வேண்டும் என பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ் வர்மா தலையணையால் டாக்டரின் முகத்தில் அழுத்தினார். இதில் மூச்சுத்திணறி டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகேஷ் வர்மா அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் வர்மாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கடப்பா ரெயில் நிலையத்திலிருந்து ரெயிலில் தப்பி செல்ல முயன்ற மகேஷ் வர்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×