search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர் படுகாயம்"

    • தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்தார். கர்நாடகாவில் இருந்து ஒகேனேக்கல் வந்தபோது விபத்து
    • கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகேனேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகே னேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அம்போது தேன்கனி கோட்டை மர கட்டா கிரா மத்தின் அருகே ஒர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது நிலை தடுமாறிய கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஒரு பெண் சம்ப இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக் கோட்டை போலிசார் விரைந்து வந்து பெண் உடலை கைபற்றி தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவம னையில் சிகிச்சை அளித்து மேற்கி ச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் இறந்தவர் வைசாலி (54) காயம் அடைந்தவர்கள் இஷான் (32) தினேஷ் (27) பவினா (27) ஹேமந் குமார்( 67) ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
    • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

    இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
    • முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி விலக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 29). இவர் தனது நண்பர்களான சின்னமனூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (26), அதே பகுதியைச் சேர்ந்த மகரந்தன் (32) ஆகியோருடன் ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, அருகில் வந்த காரை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜாங்கம், ராஜேஷ் மகரந்தன் மற்றும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த விஜய் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது.
    • தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

    கடலூர்:

    என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்குள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக தீக்காயமடைந்தவர்கள் நெய்வேலி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் சென்ற கார் மீது லாரி மோதி கவிழ்ந்தது.
    • ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தருமபுரி,

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 58). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவரும் மகாராஷ்டிராவில் இருந்து ஈரோட்டிற்கு கோழி தீவனம் ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கார் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

    இதில் காரில் சென்ற கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (62),அவரது மனைவி கலா (56) மற்றும் லாரியில் வந்த ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ×