search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு அழைப்பு"

    • பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    ஈரோடு:

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவங்களில் பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரும், ரபி பருவத்தில் கரும்பு பயிரும் பிர்க்கா அளவில் அறிவி க்கை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு 28 பிர்கா க்களும், கரும்பு பயிருக்கு 30 பிர்காக்களும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளன. அறிவிக்கை செய்ய ப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.557.25 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ரூ.3115 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி 1433 ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகிய வற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சம்பா நெல் பயிருக்கு வருகின்ற நவம்பர் 15-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு அடுத்த வருடம் மார்ச் 30-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும்.

    இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடா மல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஈரோடு:

    கொடுமுடி வட்டார விவசாயிகள் தங்கள் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இத்திட்டமானது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், குடும்ப அட்டை , வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று தானியங்கள் (வேளாண் உள்ளீட்டு அமைப்பின் விவசாயி ஆன்லைன் பதிவு) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணை க்கப்பட்ட விவசாயியின் விவரம் தானியங்கள் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு

    வேளாண்மை-உழவர்நலத்துறை பேரிடர் மேலாண்மை துறை, தோட்ட க்கலைதுறை, கூட்டுற வுத்துறை, பட்டுவளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல்த்துறை,

    ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரி ப்பு த்துறை, வேளாண் வணிகம் , விதை சான்றளி ப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

    எனவே கொடுமுடி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி தானியங்கள் இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    பரமத்திவேலூர்:

    விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வண்ணம் எதிர்ப்பு சக்தி வம்பன்-11 ரக விதைகளுக்கு உள்ளது. மேலும் அதிக காய் பிடிக்கும் திறன் கொண்டது.

    ஒரே மாதிரியான முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தர கூடியது.

    இது வம்பன் 8 ரகத்தை விட 12 சதம் கூடுதலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை என அனைத்து மாதங்களிலும் இந்த விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்யலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.
    • ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழு வாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.

    தற்போது, ஒரே கிராமத்தில் அல்லது அருகாமை யில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் அங்ககச்சான்று பெறலாம். இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம்.

    குறைந்தபட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவ சாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழிப் படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.

    தனிப்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சான்று பெற இயலாது. குழுவாக மட்டுமே பதிவு செய்ய முடியும். தவறான தகவல்கள் இருந்தால் குழு இடைநீக்கம் செய்யப்படும். குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப்படாத இடு பொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து

    நீக்கப்படுவார். இத்திட்டத்தில் கட்டணமின்றி எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயி களுக்கு பயனுள்ளதாகவும், அதிகளவில் விவசாயிகள் அங்ககச்சான்று பெற முடியும்.

    எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழு வாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

    • மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்க திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தருமபுரி,

    வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ஆதி திராவிட (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு, மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்க திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்வட்டத்தில் சிட்டிலிங், வேடகட்டமடுவு, செல்லம்பட்டி பகுதிகளிலும் சுஞ்சல்நத்தம் உள் வட்டத்தில் தொண்ணகுட்ட அள்ளி, நாகமரை பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022 (கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சிகள்) ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் குறைந்தது (1 முதல் 5 ஏக்கர் வரை) உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று பெறப்பட வேண்டும்.

    சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் (அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்திட வேண்டும்.

    பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள தொன்னகுட்டஹள்ளி, நாகமரை, வேடகட்டமடுவு, செல்லம்பட்டி மற்றும் சிட்லிங்கில் உள்ள SC/ST பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    இத்திட்டம் "பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம்"- ஒவ்வொரு வயலுக்கும் நீர் நிலத்தடி நீர்ப் பாசனத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

    அரசினால் நிர்ணயிக்கப்பட்ட(100m) ஆழத்திற்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ, 10hpக்கு கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட செயற்பொறியாளர் (வே.பொ), போன்- 04342296948, வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், உதவிசெயற்பொறியாளர் போன்- 04342 296132, மாவட்ட ஆட்சியர் வளாகம் தருமபுரி, உதவிசெயற ்பொறியாளர்(வே.பொ), போன்- 04346296077, வேளாண்மை பொறியியல் துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர், மேல்கண்ட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்து கொள்முதல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • குறைந்தபட்ச ஆதார விலையில்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    புதுக்கோட்டை, நவ.14- தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது உளுந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 170 மெ.டன் உளுந்து மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 160 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    உளுந்து கொள்முதல் 29.12.2022 வரை நடைமுறையில் இருக்கும். எனவே இத்திட்டத்தில் உளுந்து விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் உளுந்து கொள்முதலுக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல் சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஈரோடு:

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபி டிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம், தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல் சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனை த்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சம்பா நெல்பயிருக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.554.25 செலுத்த வேண்டும்.

    அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்குபுத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    வருகின்ற 15-ந் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வும் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 15 -ந் தேதி ஆகும். எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

    எனவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விபரங்களை சரிபார்ப்பதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:- சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் சேதம், இழப்பு ஏற்படும் போது பயிர் காப்பீடு திட்டம் மூலம், இழப்பை தவிர்க்கலாம்.

    ஈரோடு மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்ய ப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வரும் ஜனவரி மாதம் 18 -ந் தேதிக்குள் முட்டை கோஸ் பயிர் ஏக்கருக்கு, 1,100 ரூபாய்,31-ந் தேதிக்குள் வெங்காயம் ஏக்கருக்கு 2,210 ரூபாய், பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் வெண்டை பயிர் ஏக்கருக்க 972 ரூபாய், 28-ந் தேதிக்குள் வாழை பயிர் ஏக்கருக்கு 4,485 ரூபாய், மரவள்ளி பயிர் ஏக்கருக்கு, 1,940 ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்.

    அந்தந்த பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் "தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்" என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 25 வகையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. மகோகனி, செஞ்சந்தனம், பூவரசு, செம்மரம், மலைவேம்பு, வேங்கை, கடம்பு, ரோஸ்வுட், மருத மரம், இலுப்பை, புளி, நாவல், வாகை, எட்டிமரம், கடுக்காய், இலவங்கம் மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை பண்ணை, தனியார் நாற்றங்கால் மற்றும் டி.ஆர்.டி.ஏ.- மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் முழு மானியத்தில் வழங்கப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 80 சதவீத மரக்கன்றுகளும், இதர கிராமத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீத மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட மரக்கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு உழவன் செயலி மூலமாக அல்லது அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையின்படி மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் வினியோகம் "வரப்பு நடவு முறை" எனில் ஏக்கருக்கு 64 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், அதிகபட்சம் 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.

    விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 400 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். விவசாயிகள் மரக்கன்றுகளை 40:20:20:20 என்ற விகிதாசாரத்தில் கலந்து பெற்று கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1,65,000 மரக்கன்றுகள் இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்க தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

    மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும், களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். 50 சதவீத சிறு, குறு விவசாயிகள், 30 சதவீத பெண் விவசாயிகள், 19 சதவீத ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீத பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதால் எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் மேம்படுவதோடு மாநிலத்தின் பசுமைப்பரப்பும், சுற்றுப்புற சூழலும் மேம்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்து மரக்கன்றுகள் பெறப்படாத விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்படும். ஆகவே ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    ×