என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மரபுசார்"
- வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.
- கண்காட்சியில் விவசாயிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 2-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் புஞ்சை துறையம்பாளையத்தில் உள்ள ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மரபியல் பன்முகத்தன்மை குறித்த விஞ்ஞானிகளின் தொழி ல்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்க ளின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனை க்காகவும் வைக்கப்பட்டி ருந்தது.
சிறப்பு விருந்தினர்களாக டி.என்.பாளையம் ஒன்றியக்குழுத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி த்தலைவர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயி களுக்கும் பாரம்பரிய பயிர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) (பொ) பாமாமணி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.
ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி முத ல்வர் கல்யாணசு ந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.
பவானி சாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர்கள் மற்றும் கே.வி.கே. மைராடா வேளா ண்மை அறிவியல் நிலைய விஞ்ஞா னிகள் தொழில்நுட்ப உரையாற்றி னர்.
விழாவில் வேளாண்மை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் கூகா விதைகள், கழனி, உழவகம், பாசம், தேன்கூடுவள ஆதார மையம் போன்ற தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கருத்துரை யாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொ ண்டனர். கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
இந்நிகழ்வின் போது கல்லூரி வளாகத்தில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
- தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் “நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின்” இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு.
- நெல் ரகங்கள் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியவிலையில் பெற்று பயனடையலாம்.
பரமத்தி வேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது-
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் "நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின்" கீழ் பாரம்பரிய விதை நெல் ரகங்களான கருப்பு கவுனி மற்றும் தூயமல்லி ரகங்கள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளன. எனவே மேற்கண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியவிலையில் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்