search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்தானம்"

    • மதுரை கண் ஆஸ்பத்திரிக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக கண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண்தானம் செய்வோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் தேவதானம் மனற்படுகையை சேர்ந்த பெரியசாமி மனைவியும், கார்த்தி தாயாரும், கட்டிமேடு ஓவிய ஆசிரியர் நேரு சகோதரியுமான மணிமேகலை மரணம் அடைந்தார். முன்னதாக மரணத்திற்கு முன்பே அவர் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்.அதன்படி மணிமேகலை கண்களை தானமாக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் பெற்று குடும்பத்தினரின் ஒப்புதலோடு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    மறைந்தும் நான்கு நபரின் வாழ்வில் ஒளியேற்றி, உயிர் வாழ்கிற மணிமேகலை குடும்பத்திற்கு ராய் டிரஸ்ட் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும் போது, தானங்களில் சிறந்தது கண்தானம். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்குக் காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது.

    இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 - 8 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரத்தியோக ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்து வருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப் படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.

    கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண் தானம் செய்வோம். கண்கள் புதைப்பதற்கு அல்ல, விதைப்பதற்கு என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.

    • நிகழ்ச்சியில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.
    • பேரணியை கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தமிழ்நாடு முழுவதும் 324கே மாவட்டத்தின் சார்பாக கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சசி ஞானசேகரன், சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ்,ஆனந்த், சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் முனைவர் அருணாச்சலம் வரவேற்றார். இதில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

    பேரணியை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர் குழு நிறுவனர், வட்டாரத் தலைவர் கே. ஆர். பி. இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அங்குள்ள நிறுவனர்களை சந்தித்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் புறப்பட்டு சென்றார்கள். பேரணியின் ஏற்பாடுகளை 324 கே கண்தான மாவட்ட தலைவர் சோபா ஸ்ரீகாந்த், கண்தான பேரணி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்

    • 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னில வகித்தனர். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கண்தானத்தை ஊக்குவிக்கும் விதமாக பார்வை இழந்தோர் பார்த்து மகிழ கண்களை தானம் செய்யுங்கள் என்று தங்கள் கண்களை கருப்பு ரிப்பன்னால் கட்டிக்கொண்டு பார்வையற்றவர்கள் நடப்பது போல் நடந்து விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக் கப்படு கிறது.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார்.

    கடலூர்:

    தேசிய கண்தான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை கடைபிடிக் கப்படு கிறது. கடலூரில் 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் செவிலி யர்கள், மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் அனை வரும் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-

    பொதுமக்கள் அனை வரும் கண்தானம் விழிப் புணர்வை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பலகோடிக் கணக்கான மக்கள் பார்வை இழப்புடன் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதனை சரி செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் இறந்த பிறகு நமது 2 கண்களை தானமாக கொடுத்தோமானால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தாங்க ளும் தங்கள் குடும்பத்தி னர்களுக்கும், நண்பர்க ளுக்கும் கண்தானத்தின் அவசியத்தை எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் சாரா செலின் பால் , துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மீரா , தலைமை கண் மருத்துவர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

    • கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
    • கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது?

    கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

    கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும்.

    இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.

    புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    • விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
    • கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அடோசென்டன். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செடோரா(வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினர். கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செடோரா மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வெளியே சென்றார். அப்போது கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் பெற்றோர் ஒப்புதலின் பேரில் சிறுமி செடோராவின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உலக கண்ணொ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இளங்கலை மாணவர்க ளால் உருவா க்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருது துரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசும்போது, தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துறை பேராசிரியரும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளருமான ஞான செல்வன் தலைமையில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.

    முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

    இந்த ஒரு மாத அளவில் கண் புரை அறுவை சிகிச்சையில் டாக்டர்களின் பங்களிப்பில் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கண் தானம் செய்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்வது மிகவும் எளிது. உடல் தானம் செய்பவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.

    ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    தேசிய கண் தானஇரு வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி சிலை அருகில் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனை கூட்ட அரங்கிற்கு வந்தது. பேரணியை இணை இயக்குநர் முருகவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சுரன் நர்சிங் காலேஜ் மாணவிகளின் கண்தான விழிப்புணர்வு பற்றிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை அன்னை சந்தியா கண்தான கழக நிறுவனர் நாகலட்சுமி வழங்கினார்.

    இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜெயபாஸ்கர், நூர்தீன், நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    ×