என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கரும்புகையால் மக்கள் அவதி"
- மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
- மக்கள் கடும் பாதிப்பு
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பயோ டீசல் உற்பத்தி செய்யப்படும் ஆலையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் இருந்து தினமும் அடர்ந்த கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், தும்மல், அலர்ஜி ஏற்படு வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிக்கு தகவல் அளித்தும் கண்டு கொள்ள வில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் ஏழு திங்கள்பட்டி, வாய்ப்பாடி, ஈங்கூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மிக அதிக அளவாக அடர் கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அளிப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சுவிட்ச் ஆப் என்று வந்து உள்ளது.
இதனால் கொதிப்படைந்த மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆலையை மூடி புகை வெளியேற்று வதை தடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் கூறும் போது, புதிதாக தொடங்கப்பட்டு உள்ள இந்த பயோ டீசல் ஆலையில் இருந்து வெளி யேறும் கரும்புகையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். ஏற்கனவே இங்குள்ள ஆலைகளால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதித்துள்ளன.
தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் பயோடீசல் ஆலையால் காற்றும் மாசுபடுகிறது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் பெருந்துறை சுற்று வட்டார மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகையை பில்டர் செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் தான் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நேற்று இரவில் இருந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையி ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலை நிர்வாகத்தினர் இப்போதைக்கு ஆலையை மூடி விடுவதாகவும் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திய பிறகே ஆலையை இயக்குவதாகவும் மக்களுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
- ஆலம்பாடி, மல்லப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் கொட்டாங்குச்சிகளை எரித்து கரி தயாரித்து வருகின்றனர்.
- கரும்புகை வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி, மல்லப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் கொட்டாங்குச்சிகளை எரித்து கரி தயாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து எரிக்கப்படும் கொட்டாங்குச்சிகளால் கரும்புகை வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் நிலம் மற்றும் நீர், காற்றுமாசு ஏற்படுகிறது. எனவே இதனை தடைசெய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்