search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அளவில் முதலிடம்"

    • வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • எனது வெற்றிக்கு பயிற்சியாளர்களின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.

    வேடசந்தூர்:

    தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் சி.ஒ.எ. ஆகிய தேர்வுகளை நடத்துகிறது.

    2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தமிழ் தட்டச்சு இளநிலையில் முதல் தாள் 100 மதிப்பெண்கள் இரண்டாம் தாள் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இவர் கூறுகையில், எனது வெற்றிக்கு பயிற்சியாளர்கள் முனியப்பன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.

    • பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது.
    • ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி,

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது.

    இந்த தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 1,550 மாணவர்கள், 3,214 மாணவிகள் என மொத்தம் 4,764 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவர்கள், 77 மாணவிகள் என மொத்தம் 92 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தருமபுரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார்.
    • அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் படத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றார்.

    இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் 467 மார்க் எடுத்து இவர் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×