என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாட்ஸ் அப் குழு"
- வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர்.
- ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காந்தி வேட்டாவை சேர்ந்தவர் பீம் தாஸ். இவர் அதே பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். மேலும் இவர் உள்ளூர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.
இவரது வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர். இவர்கள் பீம்தாஸ் வாட்ஸ் அப் குழுவில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் புதிய வாக்குறுதிகள் எதையும் அளிக்காமல் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருவதாக பதிவு செய்தனர்.
இதனைக் கண்ட பீம் தாஸ் அவர்களை வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினார்.
இதனைக் கண்ட 3 பேரும் ஆத்திரமடைந்து பீம் தாஸ் வீட்டிற்கு சென்று ஏன் வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினீர்கள் என்றால் தட்டி கேட்டனர்.
இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பீம் தாஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து 3 பேரையும் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அவர்களும் பீம் தாசை தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பன்ஸ்வாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிஜமாபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பீம் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது.
- வாட்ஸ் அப் குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் படையப்பா என்று பெயரிட்டுள்ளனர். இந்த யானை பெயரில் அவர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியதோடு, வாட்ஸ் அப் குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். அந்த குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.
- அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
- குறுகிய வழித்தடங்களை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது. அதில் விபத்துக்கள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது.
சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாகைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். செங்கல்பட்டு -திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அறிவுறுத்தும் பொருட்டு குழுவில் பகிரவும் அவர்களை கண்காணிக்கவும் வாட்ஸ் அப் குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏ. எஸ் .பி அபிஷேக் குப்தா ., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ,நெடுஞ்சாலை ரோந்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்ளிட்டார் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்