search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    • தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், கயானாவில் இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.

    ஆனால் கயானாவில் மழை பெய்து வருவதால் மைதானத்தைச் சுற்றி ஈரப்பதம் காணப்படுகிறது. இதையடுத்து, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஜஸ்பிரித் பும்ரா எனது காலத்தில் இருந்ததைவிட 1000 மடங்கு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா, இதுவரை வீசிய 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    "என்னை விட பும்ரா 1000 மடங்கு சிறந்தவர். தற்போது இளம் பையன்கள் எங்களை விட மிகவும் சிறந்தவர்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. அவர்கள் சிறந்தவர்கள்" என்று கபில் பிரபல செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா, இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கு குறைவாகவே விட்டுக்கொடுத்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 68 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


    434 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையுடன் ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றியைப் பெற்றார். அவரது 253 விக்கெட்டுகளைப் பெற்றார்.

    1983-ல் இந்தியாவை முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற 65 வயதான கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    தற்போதைய இந்திய அணியினரை "அவர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் உடற்தகுதி உடையவர்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அற்புதமானவர்கள்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

    • வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
    • மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்

    ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :

    மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

    ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.

    ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.

    தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

    கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.

    இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.

    வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றது.
    • முதல் அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டினார்.

    டிரினிடாட்:

    டிரினிடாட் நகரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில், இந்த போட்டி டிரினிடாடில் நடந்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி டிரினிடாட் நகரில் நடந்திருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.

    திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. அதன்பின் அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும், புதிய மைதானத்தில் பழகவோ நேரம் இல்லை என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால், கயானாவில் 2வது அரையிறுதி நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?.
    • விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி இன்று இரவு நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஒரு அணியாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?. விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.

    ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றால், ஒரு நபர் நட்சத்திரமாக ஜொலித்தால் போதும். அவரால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் தொடரை வெல்ல வேண்டுமென்றால் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் பும்ரா அல்லது அர்ஷ்தீப் போன்றோரை சார்ந்து சென்றீர்கள் என்றால், அதன்பின் நீங்கள் தோல்வியை நோக்கி செல்கிறீர்கள்.

    நாம் அணியை பற்றி பேசுவோம். இது தனி நபரை விட சிறந்த கண்ணோட்டத்தை கொடுக்கும். முக்கிய வீரர் இருப்பார். நாம் அவரைச் சுற்றி வரலாம். ஆனால், உலகக் கோப்பையை வெல்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

    1983 உலகக் கோப்பையை வென்றபோது ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், யாஸ்பால் சர்மா உள்ளிட்ட அனைவரும் மேட்ச் வின்னிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினர். ஒரு வீரரை சார்ந்து இருக்க தொடங்கினால், கோப்பையை கைப்பற்ற செல்லவில்லை என்று அர்த்தம்.

    இவ்வாறு கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • இன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று இரவு கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைபட்டு ரத்தானால் புள்ளிப்பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்

    இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    மேலும், மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதலாக 250 நிமிடம் (4 மணி நேரம், 10 நிமிடம்) தரப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 10 ஓவர் விளையாடி இருந்தால் போட்டி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
    • எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.

    இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.

    ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
    • தோல்வியடைந்தாலும் ஆப்கன் பந்துவீச்சாளர் பரூக்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஸி மற்றும் யான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிஸா ஹென்றிக்ஸ் 29 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 23 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலகக்கோப்பை தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-

    17* - பசல்ஹக் பரூக்கி (ஆப்கானிஸ்தான், 2024)

    16 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2021)

    15 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை, 2012)

    15 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2022)

    15 - அர்ஷ்தீப் சிங் (இந்தியா, 2024)

    • தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி தலா 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதில் ஒருவர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் (10) மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 56 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் குறைந்த (56) ரன்னில் ஆல் அவுட் ஆன 2-வது அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

    இதை தவிர டி20-யில் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

    டி2 உலகக் கோப்பைகளில் குறைந்த ஸ்கோர்கள்

    55 - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், 2021

    56 - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, தாரூபா, 2024*

    60 - நியூசிலாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014

    70 - வங்காளதேசம் vs நியூசிலாந்து, கொல்கத்தா, 2016

    ×