search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளைகாப்பு"

    • திருநாவலூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா பா.கில்லனுர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ஏழுமலை. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு அம்சலேகா என்ற மனைவியை திருமணம்செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பாபு ஏழுமலையின் சகோதரிக்கு வளை காப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த நிலையில் பாபு ஏழுமலை அம்சலேகாவிடம் எனது சகோதரிக்கு வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அம்சலேகா, நான் ஏன் செய்ய வேண்டும், நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துள்ளார். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து வேறு பாட்டை ஏற்படுத்தியது.

    அம்சலேகாவை பாபு ஏழுமலை திட்டி அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அம்சலேகா மன வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் பாபு ஏழுமலை வெளியில் சென்ற போது வீட்டின் பின்புறம் வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு அம்சலேகா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாபு ஏழுமலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா குமாரபாளையம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடை பெற்றது. திட்ட அலுவ லர் வித்யலட்சுமி முன்னி லையில் நடைபெற்ற விழா வில் தாய்மார்களுக்கு மாலை கள், வளையல், மஞ்சள், குங்குமம், தட்டு உள்ளிட்ட பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இதில் புடவை இல்லாதது கண்ட சேர்மன் விஜய்கண்ணன் உடனடியாக 60 சேலைகள் வாங்கி வர சொல்லி, குத்துவிளக்கேற்றி வைத்து அனைவருக்கும் சீர்வரிசை தட்டுடன் புடைவையும் கொடுத்து வாழ்த்தினார். இதில் பெண் கவுன்சிலர்கள் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மஞ்சள் அரிசியால் கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்தனர்.

    விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், கனக லட்சுமி, வள்ளியம்மாள், பரிமளம், மகேஸ்வரி, சியாமளா, கிருஷ்ணவேணி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், 3வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, 35 -வது வார்டு கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், திலகராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×