search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி பிறந்தநாள்"

    • கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    பொன்னேரி:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு தலைவர் கோகுல், கிளை தலைவர் கண்ணன், நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி அடுத்த டி. வி. புரத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செயலாளர் பிரபு ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    • பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஒன்றிய தலைவர் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஏற்பாட்டில் நடந்தது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி தாந்தோணியில் ஒன்றிய தலைவர் மணியன் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் அகிலேஷ் ஏற்பாட்டில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் மங்களம் ரவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாநில மேலாண்மை பிரிவு செயலாளர் சாய் பூர்ணிமா, மாவட்ட ஓபிசி. அணி தலைவர் சிவலிங்கம், மாவட்ட ஐடி., பிரிவு தலைவர் குணசேகர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கதிரவன், உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் கௌதமன், பொருளாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடை வழங்கப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சியினரால் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்து உள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. பனை தொழிலாளியான இவர் தற்போது பனை ஓலையில் பல்வேறு பொருட்களை செய்து அசத்தி வருகிறார்.

    குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி உருவத்தையும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உருவத்தையும் பனை ஓலையில் செய்து அசத்தி உள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சியினரால் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதற்காக பல்வேறு பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்து உள்ளார். அவருக்கு கண்ணாடி அணிவித்தும், சட்டை, பேண்ட் அணிந்து தத்ரூபமாக அவரது உருவத்தை வடிவமைத்து உள்ளார்.

    இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் அவரது உருவத்தை பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.

    ×