search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
    • நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது

    பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 104-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இந்தியா 31-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றன. 28 டெஸ்ட் 'டிரா' ஆனது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. இன்றைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    • ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.
    • இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது.

    நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.

    இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன.

    இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது.

    ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை. இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை முறியடித்த முதல் இந்திய கேப்டன் ரோகித் ஆவார்.

    கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. இலங்கையை 3-0 என்ற கணக்கில் கிளீன் ஸ்வீப் செய்த பிறகு இந்த வெற்றி கிடைத்தது.

    முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும் இந்தியா அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். ரோகித் சர்மா தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தால், தொடரில் மிகப்பெரிய முன்னிலை பெறும்.

    • இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா.
    • இவர் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார்.

    ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடி உள்ளனர்.

    புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார்.

    அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார். *புஜாரா 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்டில் 4 மற்றும் 72 ரன்கள் வீதம் எடுத்தார். 2017-ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்கள் குவித்தார். ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் இவர் தான்.

    100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஜெயதேவ் உனத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜெயதேவ் உனத்கட் விளையாடவுள்ளார்.

    இவரை தொடர்ந்து காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத அய்யர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இடம் பெறுவது கடினம் என தகவல் வெளியாகி உள்ளது.

     

    என்.சி.ஏ-ல் பயிற்சி பெற்று வரும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வது போல சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட திரும்புவதற்கான விதிமுறை குறைந்தபட்சம் உள்நாட்டு சுற்றுகளில் ஒரு ஆட்டத்தையாவது விளையாடுவதாகும்.

    எனவே உடனடியாக டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினமாகும். ரஞ்சி டிராபி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிக்க மார்ச் 1-5 வரை நடைபெறும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு விளையாட அழைக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய முகாமில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா வென்றது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி தர்மசாலாவில் நடப்பதாக இருந்தது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. புல் இல்லாமல் திட்டுகளாக காணப்படும் அவுட் பீல்டை இன்னும் 16 நாட்களில் தயார்படுத்துவது கடினம். அத்துடன் அடுத்த சில நாட்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.

    எனவே இந்தப் போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.

    இந்த டெஸ்ட் இந்தூர் அல்லது ராஜ்கோட்டுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது. தர்மசாலாவில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு எந்த போட்டிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும் உள்ளனர்.
    • சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.

    நாக்பூர்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

    கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 400 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்பட 4 இந்திய வீரர்களை முந்தி உள்ளார்.

    கோலி 24, ராகுல் டிராவிட் 21, கேஎல் ராகுல் 17, புஜாரா 15, விவிஎஸ் லஷ்மன் 5 ஆகியோரை பின்னுக்கு தள்ளினார் முகமது சமி. சமி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.

    • ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
    • ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

    நாக்பூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் நாளிலேயே 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக அஸ்வின் 23 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் அடித்தார் ரோகித் சர்மா.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 9-வது சதம் ஆகும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் கேப்டனாக விராட் கோலி, டோனியால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 4 வீரராக ரோகித் உள்ளார்.

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்

    1. தில்சன் (இலங்கை)

    2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா)

    3. பாபர் அசாம் (பாகிஸ்தான்)

    4. ரோகித் சர்மா (இந்தியா)

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    நாக்பூர்:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 64 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    • உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
    • அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

    உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர். தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தேநீர் இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 177 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நாக்பூர்:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.

    அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×