search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
    • டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது.

    சென்னை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று பிற்பகலில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி பெறுகிறார்கள்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும். ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 117 ரன்னில் சுருண்டது பரிதாபமே. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேப்பாக்கத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளயைாட வேண்டும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல ஆடம் சம்பா, அபோட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டிரெவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஷ் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதே போல கேப்டன் ஸ்டீவ் சுமித்தும், வார்னரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது. அதே நேரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட்டை போலவே ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் கிரிக்கெட் கோலாகலத்துக்கு தயாராக உள்ளனர்.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று கருதப்படுகிறது.

    தங்களது அபிமான வீரர்களின் ஆட்டத்தை நேரில் காணும் குதுகலத்தில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • 1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோராகும்.
    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

    இந்தியாவில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியமாகும்.

    2011 உலக கோப்பை போட்டியையொட்டி இந்த ஸ்டேடியம் ஒவ்வொரு கேலரியாக சீரமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 புதிய கேலரிகள் திறக்கப்பட்டன.

    சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி 1987 அக்டோபர் 9-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக கோப்பைக்கான அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது. கடைசியாக 2019 டிசம்பர் 15-ந் தேதி இங்கு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மோத உள்ளன. சேப்பாக்கத்தில் இதுவரை 23 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்திய அணி 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 7-ல் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை. ஆஸ்திரேலியா 5 போட்டியில் 4-ல் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இரு அணிகளும் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 2017 செப்டம்பரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்னில் வெற்றி பெற்றது.

    1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே நேரத்தில் 2007-ல் ஆப்பிரிக்க லெவனுக்கு எதிராக ஆசிய லெவன் 7 விக்கெட்டுக்கு 337 ரன் குவித்து இருந்தது. இந்திய அணி சேப்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது. 2015 அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த ரன்னை எடுத்து இருந்தது.

    2011 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா 69 ரன்னில் சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோராகும். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 103 ரன்னில் (2010) சுருண்டு இருந்தது.

    டோனி 6 ஆட்டத்தில் விளையாடி 401 ரன் எடுத்துள்ளார். சராசரி 100.25 ஆகும். 2 சதமும், ஒரு அரை சதமும் இதில் அடங்கும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக விராட் கோலி 283 ரன் (7 போட்டி) எடுத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் அதிக ரன் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 1997-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி இந்தியாவுக்கு எதிராக அவர் 146 பந்துகளில் 194 ரன் குவித்தார். இதில் 22 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அதற்கு அடுத்தப்படியாக டோனியும், ஹெட்மயரும் 139 ரன் எடுத்து இருந்தனர்.

    வங்காளதேச வீரர் முகமது ரபீக் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை (3 போட்டி) கைப்பற்றி இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக அகர்கர், ஹர்பஜன்சிங் (இந்தியா), அல்பி மார்கல் (தென் ஆப்பிரிக்கா) தலா 7 விக்கெட் எடுத்து இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

    • மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டியில் இந்தியா வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

    முன்னதாக தனது உறவினர் திருமணத்திற்காக சென்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா 2-வது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடினார்.

    அந்த போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


    அங்கிருந்த சிலர் ரோகித் சர்மாவுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற நிலையில் ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அப்போது அந்த ரசிகர் பூ கொடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே சில ரசிகர்களிடம் பெற்று தனது கையில் வைத்திருந்த ரோஜா பூவை "இதை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி அந்த ரசிகரிடம் ரோகித் சர்மா கொடுத்தார். அப்போது அந்த ரசிகர் மிகவும் நன்றி என்று ஆனந்தமாக தெரிவித்ததார். ஆனால் அதற்கு நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று அந்த ரசிகர்களிடம் வேடிக்கையாக விளையாட்டுக்கு கலகலப்பாக சொல்லிக் கொண்டே ரோகித் சர்மா அங்கிருந்து சென்றார்.

    அந்த ஆனந்தத்துடன் அந்த ரசிகர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு ரசிகரிடம் இப்படியா சொல்வது என்று சிரிப்பதுடன் ரசிகர்களிடம் பாகுபாடின்றி விளையாட்டாக பழகும் கேப்டன் ரோகித் சர்மாவை மனதார பாராட்டுகிறார்கள்.

    • இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், முகமது சமி, சிராஜ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 4 பேர் டக் அவுட்டில் வெளியேறியுள்ளனர்.

    1995 - இந்தியா - பாகிஸ்தான் - ஷார்ஜா

    1997 - இந்தியா - பாகிஸ்தான் - ஹைதராபாத்

    2009 - இந்தியா - ஆஸ்திரேலியா - கவுகாத்தி

    2011 - இந்தியா - தென் ஆப்பிரிக்கா - நாக்பூர்

    2017 - இந்தியா - இலங்கை - தர்மசாலா

    2023 - இந்தியா - ஆஸ்திரேலியா - விசாகப்பட்டினம்

    இதன் முலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்களில் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

    இந்தியாவில் இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள்:

    1986 - இந்தியா - இலங்கை - 78 ரன்கள்

    1993 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - 100 ரன்கள்

    2017 - இந்தியா - இலங்கை - 112 ரன்கள்

    2023 - இந்தியா - ஆஸ்திரேலியா - 117 ரன்கள்

    1987 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - 135 ரன்கள்

    • இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

    பின்னர் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் நாளை பயிற்சி பெறுகிறார்கள்.

    சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

    ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
    • முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவை 188 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    ஆனால் பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரர்கள் சொதப்பினர். 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தது. இதனால் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் சிறப்பான நிலையில் உள்ளார்.

    மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதை சரி செய்ய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளனர். நாளைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.

    • பீல்டிங்கின் போது ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
    • கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: ஜடேஜா- ராகுலை புகழ்ந்த ஹர்திக் பாண்ட்யாஇந்தியா -ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே குவித்தது.

    பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களும் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 45 ரன்களையும் குவித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்த வெற்றிக்கு 2 பேர் முக்கிய காரணமாக உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நாங்கள் அழுத்தத்தை சந்தித்தோம். இருந்தாலும் அந்த தருணங்களை சரியாக சுதாரித்து வெற்றியை நோக்கி பயணித்ததில் மகிழ்ச்சி. உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

    எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளதாக நினைக்கிறேன். பீல்டிங்கின் போது ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதோடு ஜடேஜாவை பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்த அவர் தான் எவ்வளவு பெரிய வீரர் என்பதை இந்த போட்டியின் மூலம் காண்பித்துள்ளார்.

    இந்த சேசிங்கின் போது சரியான நேரத்தில் நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. அதனை கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் செய்து காண்பித்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எங்களை வெற்றிக்கும் அழைத்துச் சென்றது. மைதானத்தில் நல்ல வெயில் இருந்தது. இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையுமே நான் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினேன்.

    இறுதியில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மேலும் நம்பிக்கையை தந்துள்ளது. ஒரு ஒட்டுமொத்த அணியாக நமது அணியின் செயல்பாட்டினை நினைத்து பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

    மும்பை:

    ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.


    இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
    • டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிந்து இருந்தனர். அவர்கள் கூறியதாவது:-

    மகேஷ், சாந்தகுமார், பரணி (காஞ்சீபுரம்):-நாங்கள் காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று மாலையே இங்கு வந்துவிட்டோம். அப்போது கவுண்டர் பகுதியில் தடுப்பு வேலி கூட அமைக்கவில்லை. அதன் பிறகுதான் அமைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்று நேற்று மாலையிலேயே வந்துவிட்டோம்.

    முரளி (சென்னை):-நான், நண்பர்கள் 7 பேருடன் டிக்கெட் வாங்க வந்தேன். இப்போட்டியை பார்க்க உற்சாகத்துடன் இருக்கிறோம். நள்ளிரவு முதலே இங்கு தூங்காமல் காத்திருந்தோம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுதான் முக்கியம். கண்டிப்பாக இந்தியா ஜெயிக்கும்.

    ராஜசேகர்-புவனேஸ்வரி தம்பதி (நாவலூர்):-இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாவலூரில் இருந்து இங்கு வந்தோம். காலை 5.30 மணிக்கு இங்கு வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

    ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதால் நாங்கள் இருவரும் டிக்கெட் வாங்க வந்தோம். எங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.

    முல்லைவேந்தன் (சோழிங்கநல்லூர்):-நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் அதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்க வந்தேன். டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    • இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தனது மனைவியுடன் இணைந்து ரோகித் சர்மா உற்சாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடும்ப நிகழ்ச்சி காரணமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி விளையாடியது.


    இந்த நிலையில், மைத்துனரின் திருமண நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து ரோகித் சர்மா உற்சாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டினார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் 5,000 கூடுதல் இருக்கைகளுடன் புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டினார்.

    புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.டோனி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று திறக்கப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இதற்கான டிக்கெட் இன்று வழங்கப்பட உள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    ×