search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. வாழ்த்து"

    • ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மதியழகன் எம்.எல்.ஏ ஹரிணிக்கு சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி கோமதி தம்பதியரின் மகள் கே.ஆர். ஹரிணி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தேர்வில் வெற்றி பெற்ற ஹரிணியின் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேரில் சென்றார். அங்கு ஹரிணிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், மதியழகன் எம்.எல்.ஏ. வாழ்த்து கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக தனது வாழ்த்துக்களை கூறிய அவர், ஹரிணியை ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த பெற்றோரையும் மதியழகன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.

    • இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணைதலைவர் போட்டியின்றி தேர்வாயினர்.
    • அவர்களுக்கு, தமிழரசி எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் பெண்தலைவர் மற்றும் துணை தலைவராக இருந்த செய்யதுஜமிமா, சபுரியத்பீவி ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்து பதவிவிலகினார்கள். அதைதொடர்ந்து 13-வதுவார்டில் இடைதேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நகர்செயலாளர் நஜீமுதின் மற்றும்14வதுவார்டு தி.மு.க. கவுன்சிலர் இபுராஹிம் ஆகியோர்பேரூராட்சி உறுப்பினர்களால் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் போட்டியின்றி தலைவர், துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் நஜீமுதின், துணைத்தலைவர் இபுராஹிம் ஆகியோருக்கு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×