search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
    • சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. இதனால் 3 முனை போட்டி நிலவுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

    நிறைவு நாளில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது. சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார். அதே நேரத்தில் அவர் ஷிம்லாவில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிக்கிறார்.

    • குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • தேர்தல் அறிவிப்பு தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

    குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.

    அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது.

    தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து அறவிக்க உள்ளார்.

    • நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம்.
    • நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் (பாஜக) ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வரை மாற்றினார்கள். முதலில் விஜய் ரூபானி இருந்தார். அவருக்கு பதில் பூபேந்திர பட்டேலை ஏன் மாற்றினார்கள்? அப்போது விஜய் ரூபானியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

    விஜய் ரூபானியை தேர்வு செய்தபோது பொதுமக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. இது டெல்லியில் இருந்து எடுத்த முடிவு. ஜனநாயகத்தில் யார் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். 2016ல் நீங்கள் (பாஜக) கேட்கவில்லை. 2021ல் நீங்கள் கேட்கவில்லை.

    ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் இதை செய்யவில்லை. நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம். பஞ்சாபில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு, நாங்கள் பகவந்த் மான் என்று பெயரிட்டோம்.

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் முதல்வர் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர். எனவே இன்றே உங்கள் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

    இதற்காக, பொதுமக்களின் கருத்தை அறிய, 6357000360 என்ற எண்ணை வழங்குகிறோம். இந்த எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி அனுப்பலாம் அல்லது குரல் செய்தி அனுப்பலாம். aapnocm@gmail.com என்ற மின்னஞ்சலும் செய்யலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
    • முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆம் ஆத்மி என 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல் கட்டமாக 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் மகன் சுனில் சர்மா மாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    • இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
    • டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது.

    இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மேலும், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது.

    வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 29ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.
    • இரண்டு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்து இருந்தனர்.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது.

    இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

    இந்த நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. இதில் குஜராத், இமாச்சலபுரதேச மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்து இருந்தனர்.

    சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    • பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
    • பிரசாரத்துக்கு செலவழித்த தொகை தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன.

    புதுடெல்லி :

    கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.

    அவற்றில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை தொடர்பான அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன.

    உத்தரபிரதேசத்தில் ரூ.221 கோடி, உத்தரகாண்டில் ரூ.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூ.19 கோடி, மணிப்பூரில் ரூ.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி ரூ.194 கோடி செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

    ×