search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 269648"

    • அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்
    • ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சதிஷ்குமார் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    அதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் புதிய குடிநீர் பைப்லைன் அமைப்பது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.30.90 கோடியில் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.
    • ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சியில் முருங்கையன் பரிசல் துறையில் கோவை மாநகராட்சிக்கு பில்லூர் அணையின் 3வது குடிநீர் திட்ட பணிகள் ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பணிகளில் தலைமை நீரேற்றும் நிலையம், இயல்பு நீர், சுத்த நீர் குழாய் மற்றும் கிளை பிரதான நீரேந்து குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாக செயலாளருமான சிவ்தாஸ் மீனா நேரில் சென்று இன்று ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்திட உத்தரவிட்டார்.

    உடன் கலெக்டர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×