search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடை அமைக்கும் பணி"

    • மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.
    • மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி நாவினிபட்டி 4 வழிச்சாலை அருகே நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி செய்து வருகிறார்.

    விழாவுக்கான மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான முகமது யாசின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் துரண சேர்மனுமான பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலூர் நகர்மன்ற துணைத்தலைவர் இளஞ்செழியன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    • இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் நாளை (29-ந்தேதி) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார்நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    மேடை அமைக்கும் பணிகளை இரவு-பகலாக முன்னாள் அமைச்சர்- விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் நேரம் காலை வேளை என்பதால் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பொதுமக்கள், நிர்வாகிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் கூலிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சிறப்பாக செய்திருக்கிறது.

    முன்னதாக நாளை காலை வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ மேடையில் வந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்து வருகிறார்.            

    ×