search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ்."

    • பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது.
    • பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.

    பாஜக ஐடி விங் தலைவரான அமித் மாளவியா மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க பாஜக பார்வையாளராக பணியாற்றினார். அப்போது, அம்மாநிலத்தில் உள்ள பல பெண்களை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், " பாஜகவிடம் நாங்கள் கோருவது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான். பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது. பாஜகவின் மிக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமில்ல பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அமித் மாளவியாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துள்ள அமித் மாளவியா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா மீது 10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

    மேலும், தன்னை பற்றி அவதூறாக வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அவர் நீக்க வேண்டும் என்று அமித் மாளவியா கோரியுள்ளார்.

    • அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
    • பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

    கடந்த இரு பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை எதிர்த்து அஜய் ராய் களம் இறங்கினார். தற்போது மோடியை எதிர்த்து தொடர்ந்து 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    54 வயதான அவர் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். பின்னர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    1996-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் கோலஸ்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டிலும், பின்னர் 2007- ம் ஆண்டிலும் தேர்தலில் வென்றார். 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

    அந்த தேர்தலில் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றார்.

    2009-ம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அஜய் ராய் 2012- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பிந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 -ம் ஆண்டு தேர்தல்களில் அஜய்ராய் 3-வது இடத்தை பிடித்தார். 2014-ம் ஆண்டு 7.34 சதவீத வாக்குகளும், 2019-ம் ஆண்டு 14.38 சதவீத வாக்குகளும் பெற்றார்.

    • வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வடக்கு ரதவீதி அப்பா மாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் 98-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

    பேரணியானது வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, கே.சி. ரோடு, வண்டிமலைச்சி அம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது.

    பின்னா் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவா் குருமூர்த்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி கோட்ட செயலாளா் ஜேதீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

    • பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்த இங்கு ஆளில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில் துவங்கி ஹாஸ்டல்ரோடு, கொசவம்பாளையம் ரோடு வழியாக பொதுக்கூட்ட மேடை வரை அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைத்தார். ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பில் நேர்த்தியுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் கார்மேகம், பல்லடம் நகர தலைவர் செந்தில்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணசாமி பேசுகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும்இந்த இயக்கத்தில் உள்ளனர். நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரி யப்படுத்த இங்கு ஆளில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ன்ஒவ்வொரு தொண்டனும் தேசத்தின் பாரம்பரியத்தை விதை க்கின்றனர். முன்னோர்கள், குடும்ப உறவுகள், பாரம்ப ரியம் குறித்து இன்றைய தலை முறைக்கு சொல்ல ப்படுவதில்லை.தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தும் நீங்க வேண்டும். தாங்கள் வகுத்த கொ ள்கைகள், சித்தாந்த ங்களை பல அமைப்புகள் இழந்து ள்ளன. ஆனால் தான் கொண்ட கொள்கை களால் கடந்த 97 ஆண்டு களாக உடையாத இயக்க மாகஆர்.எஸ்.எஸ்., உள்ளது என்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., மாநில பொது செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.அணி வகுப்பில் ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் கம்பீரத்துடன் பங்கேற்றனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. காரைக்குடி ரோடு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, நியூ காலனி, கீழகாட்டுரோடு, கீழத்தெரு, செட்டியார் குளம் வடகரை, சந்திவீரன் கூடம், கம்பலிங்கம் தெரு வழியாக அரசு மருத்துவ மனை ரோடு, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு பஸ் நிலையம் வழியாக பெரிய கடை வீதி வந்து சீரணி அரங்கத்தை சென்றடைந் தது.

    இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து மிடுக்காக வந்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 7 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சேவா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ராமேசுவரம் மண்டல தலைவர் மங்க ளேஸ்வரன், கோட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலை வர் குகன், ஜில்லா பொறுப் பாளர் தினேஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பா ளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • அணிவகுப்பு ஊர்வலம் முடிவில் இந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது

    நாகர்கோவில் :

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போலீஸ் அனுமதி கோரி இருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து, நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவு அடிப் படையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வ லத்துக்கு அனுமதி வழங்க வும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது.

    அதன் அடிப்படையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

    குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பேரணி நாகர் கோவில் நாகராஜாகோவில் திடலில் தொடங்கியது. இதையொட்டி அங்கு காவிக்கொடி ஏற்றப்பட்டு, பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது. பின்னர் காவிக்கொடிக்கு பெண்கள் கர்ப்பூர ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து நாகராஜா கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியானது மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவு பெற்றது. வழியில் பொதுமக்கள் மலர் தூவி பேரணியை வரவேற்றனர்.

    முன்னதாக பேரணியில் வீரசிவாஜி படம் வைக்கப்பட்ட வாகனமும் அணிவகுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு வாக்கு வாதம் நடந்தது. பின்னர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

    அணிவகுப்பு ஊர்வலம் முடிவில் இந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் செய்து காண் பிக்கப்பட்டன. கூட்டத்துக்கு குமரி மாவட்ட இந்து ஆதி திராவிடர் அறக்கட்டளை தலைவர் வேலு தாஸ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். கிழக்கு மாவட்ட செயலாளர் பிரதீஷ் வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரகுபதி ராஜாராம், மாநில செயலாளர் பவீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட தலைவர் சக்தி சின்னதம்பி ஆசியுரை வழங்கினார். மாநில துணை பொருளாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 6 மாதமாக சட்ட ரீதியான போராட்டம் நடைபெற்றது. நாம் நாட்டின் சட்டத்திட்டங்களை பின்பற்றி, நீதியின் மூலம் வெற்றி கண்டுள்ளோம்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாகிஸ்தான் போரிலும், சீனா போரிலும் ராணு வத்துக்கு உதவிசெய்தது. அதைபார்த்து பிரதமர் ஜவகர்லால் நேரு 1963-ம் ஆண்டு டெல்லி குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அருமனையில் நேற்று மாலையில் நடந்தது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் அருமனை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கி அருமனை சந்திப்பு, மேலத்தெரு வழியாக குஞ்சாலுவிளை வி.டி.எம். கல்லூரி வளா கத்தில் நிறைவ டைந்தது.

    இதில் 1300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்ற னர். தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். லட்சுமிபுரம் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென் மண்டல கொள்கை பரப்பு இணை செயலாளர் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 98 ஆண்டுகளாக தனது பணியை சீராக செய்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பணி தொடர்ந்து நடைபெறுகிறது' என்றார்.

    பேரணியை முன்னிட்டு மாவட்ட போலீசார் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    • ஆர்.எஸ்.எஸ்.பேரணி-பொதுக்கூட்டம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிறது.
    • பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமணன், முருகன், பேராசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்று கிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்தது
    • செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில், ராஷ்ட்ர சேவிகா சமிதி-மகளிர் அமைப்பு சார்பில் வழக்க மாக நடைபெறுகின்ற அணிவகுப்பு ஊர்வலம் குலசேகரத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்து.

    இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக காவல் ஸ்தலம், கூடத்தூக்கி தனியார் பள்ளியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் 1320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது.
    • தடையை எதிர்ப்பவர்கள், வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர்.

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளதாவது:

    பி.எப்.ஐ.மீதான தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது. இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும்  வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.

    இந்த தடையை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்யக் கோரும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×