என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சம்பா நெல்"
- பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
ஈரோடு:
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவங்களில் பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரும், ரபி பருவத்தில் கரும்பு பயிரும் பிர்க்கா அளவில் அறிவி க்கை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு 28 பிர்கா க்களும், கரும்பு பயிருக்கு 30 பிர்காக்களும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளன. அறிவிக்கை செய்ய ப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.557.25 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ரூ.3115 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி 1433 ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகிய வற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பா நெல் பயிருக்கு வருகின்ற நவம்பர் 15-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு அடுத்த வருடம் மார்ச் 30-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும்.
இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடா மல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சம்பா நெல் நடவு பணிகள் விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது.
- தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் வழக்கத்தைவிட வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திக ழும் வைகை அணை வறண்டதால் விவசாயம் கேள்விக்குறியானது. வழக்க மாக விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகளை தொடங்காமல் இருந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்தும் காத்திருந்தனர்.
இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை நிறைவ டைய உள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்க ளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழையால், ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறிப் பாக திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டா ரங்களில் உள்ள விவசாயி கள், நேரடி விதைப்பு முறை யில் சம்பா பருவ சாகுப டியை தொடங்கியுள்ளனர்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெளி யான அதிகாரப்பூர்வ தக வல்களால் சம்பா நடவு பணியில் விவசாயிகள் முழு வீச்சில் இறங்கியுள்ள னர். இந்த பருவத்தில் மாவட்டத் தில் 1.3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ராமநாத புரம் மாவட்டத்தில் செப்டம் பர் மாதத்தில் 5.4 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை சராசரியாக 13.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை விவசாயிகள் சங்க அமைப்பாளரும், விவசாயி யுமான கவாஸ்கர் கூறுகை யில், சம்பிரதாயப்படி, சில விவசாயிகள் தமிழ் மாத மான ஆவணி (ஆகஸ்ட்–-செப்டம்பர்) மற்றும் புரட் டாசி (செப்டம்பர்-ஆகஸ்ட்) ஆகிய மாதங்களில் சாகுபடி பணிகளை தொடங்கினர்.
தொடர்ந்து பல நாட்க ளாக பெய்த மழையால், ஆவணி மாதத்தில், விதைப்பு பணிகளை துவக்கியுள்ள விவசாயிகள், 15, 20 நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் வரவில்லை என்றால், மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு ஏக்க ருக்கு சராசரியாக 25,000 முதல் 26,000 வரை செலவ ழிக்க வேண்டும் என்றார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- சம்பா நெல் சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு பதிவு செய்ய செய்யுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- வருகிற நவம்பர் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாளாக 15.11.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் குறித்து மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் பயிர்க்கு பயிர் காப்பீடு செய்திட 2022- 23 -ம்ஆண்டுக்கு ஹெச்.டி.எப்.சி மற்றும் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் பெறப்பட்டது. இந்த பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும். பண்ணை வருவாயை நிலைப்ப டுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாளாக 15.11.2022 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நெல் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.394.50 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். பயிர்கள் முழுமையாக பாதிக்க ப்பட்ட இடங்களுக்கு காப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,300 வழங்கப்படும்.இத் திட்டத்தில் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் - பரமக்குடி, போகலூர், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கும், ஹெச்.டி.எப்.சி - வங்கியில் மூலம் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்திட வேண்டும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது தங்கள் வழங்கப்படும் அனைத்து தகவலும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ அல்லது சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில் தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.
எனவே விவசாயப் பொதுமக்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்