search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் கடத்தல்"

    • சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.

    புதுச்சேரி:

    மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் புதுச்சேரி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புதுவை பகுதியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதிகளுக்கு மெத்தனால் மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க புதுவை-தமிழக எல்லையான ஆரோவில் கோட்டக்குப்பம் வானூர், மரக்காணம், கிளியனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் ஈ.சி.ஆர். சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது புதுவையில் இருந்து 100 மில்லி சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த மரக்காணம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளிகண்ணு (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மரக்காணம் பகுதியில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை பழனி (64) என்பவரிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து பழனியை கைது செய்தனர்.

    இதேபோல் கோட்டக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விபின் (25) என்பவரிடம் 4 பிராந்தி பாட்டில், 6 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 17 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆரோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத் பிரபு (40), என்பவரிடம் 4 பீர்பாட்டில் ஒரு பிராந்தி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது திண்டிவனப் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் 48 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் சாராயம் கடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை எல்லையில் தமிழக மதுவிலக்கு போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வருவதால் புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.

    • வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் அதிவேகமாக மோட்டார்சைக்கிளில் சென்ற வரை மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சாராயம் கடத்திச் சென்ற வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை புங்க மடுவு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? எங்கே காய்ச்சப்படுகிறது? இந்த கள்ளச்சாராயம் கடத்தலில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பிருக்கிறாதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாரா யம் கடத்த பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

    ×