என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 273391"
- அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பூவுடன் சேர்த்து தழையை பறிக்க ஏரிக்கு இவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்றனர்.
- பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில் மூழ்கி பலியானார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேசூர் பாட்டை பகுதியை சேர்ந்த மின் ஊழியர் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பூவுடன் சேர்த்து தழை கட்டுவதற்காக செஞ்சி அருகே உள்ள எட்டியதாங்கல் ஏரிக்கு அருள்தாஸ் மற்றும் அவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்று தழைகளை பறித்து கொண்டு இருந்தனர்.பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில்மூழ்கி பலியானார்.இது குறித்து உடனடியாக சக நண்பர்கள் செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அருள்தாஸ் உடலை மீட்டனர்.பின்னர் இது குறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நீச்சல் செய்து ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
- 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதிகளின் 11 வயது மகனான லக்ஷய் கிருஷ்ணகுமார், கடலில் 15 கிலோமீட்டர் தூரம் நீச்சல் செய்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே, 15 கிலோமீட்டர் தொலைவை, 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நீலாங்கரை முதல் மெரினா வரையிலான கடலில் 15 கிலோமீட்டர் தொலைவை, அவர் 3 மணி நேரம் 18 நிமிடங்களில் கடந்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கான பாராட்டு விழாவில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு நீச்சல் ஆணையச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, சாதனை படைத்த சிறுவனை பாராட்டினார்கள்.
- இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.
- ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.
ராமேசுவரம்:
இந்தியா-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் நீந்தி பலர் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 1994-ம் ஆண்டு குற்றாலீஸ் வரன் தனது 12 வயதிலும், 2019-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் நீந்தி கடந்தனர்.
அதேபோல் ஆட்டி சத்தால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த ஜியாராய் என்ற 13 வயது சிறுமி 2012-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதியும், தேனியை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் அதே மாதத்தில் 29-ந்தேதி யும் தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்தனர்.
இவர்களை போன்றே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்த கடல் பகுதியை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.
சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் நீச்சலில் ஆர்வம் கொண்டவர். தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.
ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கை தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருடன் ராமேசு வரத்திற்கு வந்தார்.
அவர் தனது சாதனை பயணத்தை தொடங்குவதற்காக இலங்கை தலை மன்னார் ஊர்முனை கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அன்று மாலை 5 மணிக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து இரவிலும் விடாமல் நீந்திய அவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார். தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர கடல் பகுதியை 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார்.
இதன் மூலம் இந்த கடல் பகுதியை கடந்த முதல் மாற்றுத்திறனாளி வாலிபர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த வாலிபரை அவரது பெற்றோர், உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் பாரதீய ஜனதா கட்சியினரும் நேரில் சென்று வாலிபரை பாராட்டினர்.
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
- இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித்–துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 14, 17,19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு 100 மீட்டர், 400 மீட்டர் உள்பட 10 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு வயதுக்குட்–பட்ட பிரிவுகளில் இருந்து முதல் 3 இடங்களை பிடித்த 30 பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கவினா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் தென் மாவட்ட5-வது குறு வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளமுருகு இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சுமிசுதிர் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேமதர்ஷினி, 14 வயது பிரிவு சுரேகா, 17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
அவர்களையும், நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன்,உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரையும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், பாராட்டினர்.
- பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
- 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.
தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்