search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார் சாலை அமைக்க பூமி பூஜை"

    • மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி பழனிச்சாமி நகர் பகுதியில், சாலை சில இடங்களில் மண் சாலையாக இருந்தது. இதனை தார் சாலையாக மாற்றித் தரும்படி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பொங்கலூர் ஊராட்சி நிதியின் மூலம் ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பழனிச்சாமி நகர் பகுதி முழுவதும் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது.
    • தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் 15 வது மானிய குழுவின் கீழ் இந்திரா நகர் பகுதியில் சாக்கடையுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது.

    கட்டக்காமன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபாண்டி,ஒன்றிய கவுன்சிலர் பெனினாதேவிசரவணன், துணைத்தலைவர் செல்விமகாலிங்கம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,ஊராட்சி செயலர் பெருமாள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×