search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு மிரட்டல்"

    • வட்டார வளர்ச்சி அலுவலர், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்தபோது காரியாபட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்த குமராண்டி, அம்மாசி, தரகனேந்தலை சேர்ந்த தங்கவேல், மச்சக்காளை மற்றும் சிலர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி சிவக்குமார் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலக்கரையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது42). இவருக்கும், உறவினர் கஞ்சம்மாள் என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இந்த நிலையில் கஞ்சம்மாள் மகன் ராஜேஷ் கண்ணன், மாரீஸ்வரி நிலத்தில் டிராக்டரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மாரீஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், கார்த்தி, செல்வராஜ், பழனி ஆகியோர் மாரீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி மாரீஸ்வரி சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே: ரூ.5 லட்சம் பணம், 40 பவுன் நகை வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஆனத்தூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவரது மகள் லட்சுமி 32. இவருக்கும் அவையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் வெங்கடேசன் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இவர்கள் இருவருக்கும் இதுவரை குழந்தை இல்லை. திருமணமான நாளிலிருந்து கணவன் வெங்கடேசன் மற்றும் அவரது தாய் சாந்தா மற்றும் அவரது உறவினரான ஆறுமுகம் மனைவி குமாரி 3பேரும் பேரும் சேர்ந்து கொண்டு லட்சுமியை பார்த்து நீ ஏன் தாலி சரடு போட்டுக் கொண்டு வரவில்லை.

    நீ போட்டு வந்த 15 பவுன் நகை போதாது. இன்னும் 40 பவுன் நகை உன் வீட்டில் இருந்து வாங்கி வந்தால் தான் இங்கு குடும்ப நடத்த முடியும். நீ ஒரு குழந்தை பெற்று கொடுக்க முடியாத மலடி. இதையும் மீறி இங்கு நீ குடும்பம் நடத்த வந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவோம் என்று அடிக்கடி மிரட்டி உள்ளனர்.

    உயிருக்கு பயந்த லட்சுமி கடந்த 4 வருடங்களாக தாய் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். கடந்த வாரம் லட்சுமி பண்ருட்டி கடை தெருவுக்கு வந்துவிட்டு பேருந்து நிலையத்தில் தனியாக பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த வெங்கடேசன் இன்னும் உன் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் நீ என்னை விவாகரத்து செய்து விடு என்று மிரட்டியுள்ளார்.

    இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×