search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் ஏலம்"

    • ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஐ.பி.எல். மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படும்
    • தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஏலத்துக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் முறையே ரூ.3.45 கோடி, ரூ.2.95 கோடி மீதமுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முழு பர்சையும் தீர்த்து விட்டது.

    ×