search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராட்டம்"

    • கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வம் மற்றும் நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    • ஆட்டோ சங்கத்தினர் தர்ணா பேராட்டம் நடந்தது
    • கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் காந்தி சிலை முன்பு சி.ஐ.டி.யூ. 3 பிளஸ்1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன டிரைவர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், துணை தலைவர் பெரியசாமி, பொருளாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் கடுமையாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து அபராத கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கைவிட வேண்டும், வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு வழங்கவேண்டும், மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பபெறவேண்டும், 15 ஆண்டுகால ஆட்டோக்கள் காலாவதியானால் அரசே வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், ஆறுமுகம், பொன்ராஜ், மாவட்ட துணை தலைவர் கருணாநிதி உட்பட ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். 

    • தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    • குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் .

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல் இங்கு அமைப்பதற்கு மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக குருஸ் பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்டு கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய அவருக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் . இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடன் ஆலோசனை தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், வளன் ஆண்ட்ரூஸ், லூர்துசாமி, ராஜ், அலாய், அமலநாதன், கென்னடி, சாக், ஜெபி, பரதநலச் சங்கம் பொதுக் செயலாளர் கனகராஜ், இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×